அமெரிக்காவின் நியூயார்க் நகரில் லாரியை வேகமாக ஊற்றி வந்து பொதுமக்களின் மீது மோதி தாக்குதல் ஏற்படுத்திய சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லாரியை வேகமாக ஊற்றி வந்து பொதுமக்களின் மீது மோதி தாக்குதல் நடத்தியதோடு, ஓட்டுனர் லாரியை விட்டு கீழே இறங்கி, அங்கிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுட தொடங்கினான். அதில் ஒரு போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. கடைசியாக போலீசார், அந்த ஓட்டுனரை கைது செய்தனர். அந்த ஓட்டுனருக்கு வயது 29. அவனிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த தாக்குதல் சம்பவத்தில் 8 பேர் பலியாகினர். 12 பேர் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். சம்பவ இடத்தில் பாதிக்கப் பட்டவோருக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இது ஒரு கோழைத்தனமான தாக்குதல். நியூயார்க் போலீசாருக்கு எனது முழு ஆதரவு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.