நியூஸிலாந்து பிரதமர் ஜெஸிண்டா ஆர்டெனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நியூஸிலாந்து பிரதமர் ஜெஸிண்டா ஆர்டென் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆக்லாண்டு மருத்துவமனையில் பிரதமர் ஜெஸிண்டா அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, 50 லட்சம் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஆரோக்கியமான உடல்நலத்துடன் அழகிய ஒரு பெண் குழந்தையை ஜெஸிண்டா பெற்றெடுத்தார். சேயுடன் தாம் நலமாக இருப்பதை வெளிக்காட்டும் விதமாக ஜெஸிண்டா அவரது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில், அவரது கணவரும் குழந்தையும் தம்முடன் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். பிரதமராக பதவி வகிக்கும் போது குழந்தையை பெற்றெடுத்துள்ள இரண்டாவது தலைவர் என்ற பெயர்  ஜெஸிண்டா வசம் சென்றுள்ளது. 



இவருக்கு முன்பாக, கடந்த 1990 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் பெனாஸீர் பூட்டோ, பக்த்வார் (Bakthwar) என்ற பெண் குழந்தைக்கு தாயாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!