பிரான்ஸ் நாட்டின் நிஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு பாஸ்டில் தின கொண்டாட்டங்களின்போது கூட்டத்தினர் மீது பயங்கரவாதி ஒருவன் லாரியை மோதி தாக்குதல் நடத்தியதில் 84 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் உலகமெங்கும் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு உலகத்தலைவர்கள் பலரும் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துனிஷிய நாட்டை சேர்ந்த சகேன் நகரத்தை பூர்வீகமாக கொண்ட 31 வயதான முகமது லாகோயேஜ் பவுலெல் என்பவர் இந்த தாக்குதலை நிகழ்த்தியது தெரியவந்தது. வாகனம் மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டிருந்த நிலையில், இதில் பயங்கரவாத இயக்கங்கள் பின்னணியில் உள்ளதா? என்று பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 


இந்த நிலையில், மேற்கண்ட கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐ.எஸ் அமைப்பின் இணைய நாளிதழான அமக் இந்த தகவலை தெரிவித்துள்ளது. ஐ.எஸ்-கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள கூட்டுப்படையில் பங்கேற்றுள்ள நாடுகளுக்கு எதிரான பதிலடி தாக்குதல் எனவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.