வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை ஈடுபட்டு அடாவடி செய்து வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் அணு ஆயுதங்களை சோதித்து வருகிற அந்நாடு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் நேற்று மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நேற்று நடத்தியது என ஜப்பான் நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். இந்த அடாவடி தனம் உண்மை என வாஷிங்டனில் பென்டகனும் அறிவிப்பு வெளியிட்டது.


இந்நிலையில் இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில்,


வடகொரியா நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்து வருகிறோம். இந்த நிலைமையை நாங்கள் எதிர்கொள்வோம். தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடாகவே வடகொரியாவை பார்கிறோம். வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் இந்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என ஷின்ஷோ அபே தெரிவித்துள்ளார். தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மேலும் ஏவுகணை வானத்தில் பறந்துகொண்டிருக்கும்போதே, இது குறித்து டிரம்பிடம் விளக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை கூறுகின்றது. ''நாம் அதைக் கவனித்துக்கொள்வோம்'' என பிறகு டிரம்ப் கூறியிருக்கிறார்.


இவ்வாறு அவர் பேசினார்.