வியட்நாமில் அமெரிக்க அதிபருக்கும் வடகொரிய அதிபருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வியட்நாம் தலைநகர் ஹனோயிலுள்ள மெட்ரோபோல் என்ற சொகுசு ஹோட்டலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - உடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் இடையிலான 2 வது உச்சி மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலில் டிரம்ப்பும், அதனை தொடர்ந்து கிம்மும் அங்கு சென்றடைந்தனர். கடந்த ஜுன் மாதம் சிங்கப்பூரில் முதன் முறையாக இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியதை தொடர்ந்து, இரண்டாவது முறையாக இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இரு தலைவர்களும் புன்சிரிப்புடன் கை குலுக்கிக் கொண்டனர்.


அப்போது பேசிய டிரம்ப் மிகவும் வெற்றிகரமான பேச்சுவார்த்தையை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிட்டார். அபரிதமான, வரம்பற்ற பொருளாதார ஆற்றல் வடகொரியாவுக்கு இருப்பதாக டிரம்ப் கூறினார். அனைத்து தரப்பினரும் வரவேற்க கூடிய முடிவை பேச்சுவார்த்தையில் எட்ட முடியும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து அமெரிக்க, வடகொரிய தலைவர்களும் நேரடியாக பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். தொடர்ந்து இரவு உணவு விருந்திலும் இவருவரும் பங்கேற்றனர். இன்று 2 ஆம் நாளாக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற மண்டலமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். இந்நிலையில், இருநாடுகளுக்கும் இடையே கூட்டு ஒப்பந்தம் இன்று நடக்கப் போவதில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. அவர்களது பேச்சில் இன்னும் நிச்சயமற்றதன்மை நிலவுவதாக கூறப்படுகிறது. 


வடகொரியா முற்றிலும் அணு ஆயுதங்களை ஒழித்தால் மட்டுமே, இனிமேல் அணு ஆயுதங்கள் உற்பத்தியில் ஈடுபட மாட்டோம் என்ற உத்தரவாதத்தை அளித்ததால் மட்டுமே, அந்த நாட்டின் மீதான பொருளாதாரத்தடை நீக்கப்படும் என்று இறுதியாக டிரம்ப் தெரிவித்துள்ளார். 


இந்த சந்திப்புக்குப் பின்னர், கூட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகவில்லை என்ற செய்தியை வாஷிங்கடனும் வெளியிட்டுள்ளது. அதேசமயம், தொடர்ந்து எதிர்காலத்தில் இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.