`நான் செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை` மனம் திறந்த ஜோ பைடன்
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்கான தன்னுடைய முடிவை சரி என சுட்டிக்காட்டிய பைடன், இந்த குழப்பங்களுக்கும் தோல்விக்கும் முந்தைய நிர்வாகங்களை குற்றம் சாட்டினார்.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதன்கிழமை (ஜனவரி 19, 2022) ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை வெளியேற்றுவதற்கான தனது முடிவை சரியான முடிவு என கூறியதோடு, "நான் செய்ததற்கு நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை" என்றும் தெரிவித்தார்.
தனது அலுவலக பொறுப்புகளில் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி பேசிய அவர், "20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவது எளிதான காரியமாக இருக்கவில்லை. இதை எப்போது செய்தாலும் அது எளிதாக இருக்காது. நான் செய்ததற்கு நான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை" என்றார்.
எனினும், ஆகஸ்ட் நடுப்பகுதியில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் (Afghanistan) கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பின்னர், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நெருக்கடிக்கு பைடன் தனது அனுதாபத்தை வெளிப்படுத்தினார்.
"தாலிபான்களின் இயலாமையின் விளைவாக ஆப்கானிஸ்தானில் நடக்கும் விஷயங்களுக்காக" தான் வருத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் கூறினார்.
"ஒரு பயங்கரவாத தாக்குதலில் விமான நிலையத்தில் குண்டு வீசப்பட்டு கொல்லப்பட்ட மக்கள் குறித்த கவலை என்னை வாட்டி வதைத்தது" என்று அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்கான தன்னுடைய முடிவை சரி என சுட்டிக்காட்டிய பைடன், இந்த குழப்பங்களுக்கும் தோல்விக்கும் முந்தைய நிர்வாகங்களை குற்றம் சாட்டினார்.
"நாங்கள் வெளியேறாமல் இருந்திருந்தால், இன்னும் அதிக படைகளை அங்கு அனுப்ப வேண்டி இருந்திருக்கும் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். தாலிபான்களின் (Taliban) திறமையின்மையின் விளைவாக அங்கு நடப்பவைக்காக நான் கவலை கொள்கிறேனா? என்ற கேள்வி இருக்கிறது... ஆம் நான் கவலலை கொள்கிறேன்." என்றார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
"உலகம் முழுவதும் பல்வேறு விஷயங்கள் உள்ளன. அனைத்து பிரச்சனைகளையும் நம்மால் தீர்க்க முடியாது. " என்று அவர் மேலும் தெரிவித்தார்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியே வருவது சாதாரண விஷயமல்ல என கூறிய பைடன், " ஒரே அரசாங்கத்தின் கீழ் யாரேனும் ஆப்கானிஸ்தானை ஒன்றிணைக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இந்த நாடு பல்வேறு காரணங்களால் பேரரசுகளின் கல்லறையாக இருந்துள்ளது. இங்கு ஒற்றுமை என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாகும்" என்று பைடன் கூறினார்.
அமெரிக்காவுக்கு (America) ஆப்கானிஸ்தானால் ஏற்படும் பொருளாதாரச் சுமையையும் அவர் சுட்டிக்காட்டினார். அமெரிக்கப் படைகளை அங்கு வைத்திருக்க வாராந்திர செலவினம் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர்களாக இருந்தது என்பதை மேற்கோள் காட்டிய பைடன், இந்த பிரச்சனைக்கு அமைதியான தீர்மானம் என்பது சாத்தியமான ஒன்றில்லை என்று குறிப்பிட்டார்.
"வெற்றிக்கான வழியே இல்லை என்பதையும், அங்கு நிலைத்திருக்க இன்னும் படைகளை அனுப்ப வேண்டும் என்பதையும் நன்கு உணர்ந்த பிறகும், நான் வாரா வாரம் இத்தனை பெரிய தொகையை செலவழிக்க வேண்டுமா என்பதுதான் அப்போது பெரிய கேள்வியாக இருந்தது" என்று தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
ALSO READ | இலங்கையின் முக்கிய தமிழ் பிரதிநிதிகள் பிரதமர் மோடிக்கு கடிதம்: விவரம் உள்ளே
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR