சீனாவின் பல நகரங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. 13 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வடமேற்கு சீன நகரமான சியானில், தற்போதைய கோவிட்-19 தொற்று அதிகரிப்பை கையாளும் வகையில் கடுமையான ஊரடங்கு போடப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சியான் நகரில் போடப்பட்ட ஊரடங்கு எட்டாவது நாளை எட்டிய நிலையில், இங்குள்ள மக்கள் பலர் உணவுக்கே வழியின்று தவித்து வருகின்றனர். 


சீன (China) தேசிய சுகாதார ஆணையத்தின் கூற்றுப்படி, புதன்கிழமை 156 பேர் நாடு முழுவதும் புதிதாக பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை முந்தைய நாள் 151 ஆக இருந்தது.


பாதிக்கப்பட்ட 156 பேரில், 155 -ஐ சேர்ந்தவர்கள். ஒருவர் குவாங்சியின் தெற்குப் பகுதியை சேர்ந்தவர். 


உள்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களால் ஏற்பட்ட பரவலைத் தவிர, வெளி நாடுகளிலிருந்து வந்த 51 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 


டிசம்பர் 9 முதல், 13 மில்லியன் மக்கள் வசிக்கும் ஜியானில் 1,117 பேர் தொற்றால் பாதிக்கப்படுள்ளனர். 


வியாழன் காலை 10 மணிக்கு ஒரு புதிய சுற்று வெகுஜன சோதனை தொடங்கியது. டெரகோட்டா வாரியர்ஸுக்கு பிரபலமான இந்த நகரத்தில் அனைத்து பொது நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.


புதன்கிழமை ஒரு செய்தி மாநாட்டில், நகர அரசாங்க அதிகாரியான ஜாங் ஃபெங்கு, "கொரோனா வைரஸுக்கு (Coronavirus) எதிரான போராட்டத்தில் ஜியான் நகரம் மிகவும் தீவிரமான நிலையை எட்டியுள்ளார்" என்று கூறினார்.


ALSO READ | திடீரென உயரும் COVID-19 பாதிப்பு: கவலை அளிக்கும் ஓமிக்ரான் எண்ணிக்கை!! 


பல நாடுகளில் இருக்கும் கோவிட் கிளஸ்டர்களைப் பார்க்கையில், சியானில் உள்ள எண்ணிக்கை மிகக் குறைவே. எனினும், இங்குள்ள அதிகார்கள், இங்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். டிசம்பர் 23 முதல், நகரத்துக்குள்ளும், நகரத்தை விட்டும் பயணம் செய்ய தடை விதிகப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொற்றும் உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் பீஜிங்க் அதிக கவனம் செலுத்துகிறது. 


கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ளவோ, அல்லது அதிகாரிகளால் ஒப்புக்கொள்ளப்பட்ட அத்தியாவசிய விஷயங்களுக்காகவோ மட்டும்தான் இந்த நகர மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்ற நிலை இங்கு உள்ளது. 


இந்தக் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் (Lockdown) மக்கள் அடிப்படைத் தேவைகளுக்காகவும் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் மக்கள் விட்டிற்கு வரும் விநியோகங்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். 


சியான் அரசாங்க அதிகாரியின் கூற்றுப்படி, மக்களுக்கான பொருட்களை அவர்கள் வீடுகளுக்கே சென்று அளிக்கும் நிறுவனங்களிடம் போதுமான ஆட்கள் இல்லாததாலும், தேவை அதிகமாக இருப்பதாலும், புதனன்று அங்கு குழப்பம் நிலவியது. இந்த சிக்கலைத் தீர்க்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.


ALSO READ | இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா: மக்களுக்கு அறிவுறுத்தல்களை அளித்தது அரசு 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR