உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா ஏவுகணை சோதனை செய்து வருகிறது. இதனால் பல்வேறு பொருளாதார தடை உத்தரவுகளை பெற்று, பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க, அமெரிக்கா நேரடியாக களம் இறங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் வடகொரியாவின் சுனான் பகுதியில் இருந்து ஏவுகணை சோதனை ஒன்றை சமீபத்தில் நடத்தப்பட்டது.


இது 1,180 கி.மீ தூரம் கடந்து சென்று பசுபிக் கடலில் விழுந்தது. இந்த ஏவுகணை ஜப்பானின் வான் பகுதியில் சென்றதால், உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பிரதமர் அபே உத்தரவிட்டுள்ளார்.


மேலும் அந்நாட்டின் பாதுகாப்பில் கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரிய - அமெரிக்க கூட்டு ராணுவ நடவடிக்கையை அச்சுறுத்தம் வகையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.