வட கொரியாவில் கண்ணாமூச்சி ரே ரே Part 2: கிம்மின் சகோதரி எங்கே?
சில மாதங்களுக்கு முன்னால், வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்க்-உன் காணாமல் போனார். அவர் எங்குள்ளார் என்பதே யாருக்கும் தெரியாமல் இருந்தது. தற்போது அவரது சகோதரி கிம் யோ-ஜோங்கைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியாவின் (North Korea) வினோதங்கள் நிற்பதாக இல்லை. காணாமல் போகும் படலம் அங்கு தொடர்கிறது. சில மாதங்களுக்கு முன்னால், வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்க்-உன் காணாமல் போனார். அவர் எங்குள்ளார் என்பதே யாருக்கும் தெரியாமல் இருந்தது. தற்போது அவரது சகோதரி கிம் யோ-ஜோங்கைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிம் ஜாங்-உன்னின் (Kim Jong Un) சகோதரி பொது வாழ்க்கையிலிருந்து மாயமாக மறைந்துவிட்டார். வட கொரிய சர்வாதிகாரிக்கு பதிலாக அவர் இனி பொறுப்பேற்பார் என்ற ஊகங்களுக்கு மத்தியில் அவரை பல நாட்களாகக் காணவில்லை என வட்டாரங்கள் தெரிவிகின்றன.
கிம் யோ-ஜாங் (Kim Yo Jong) ஒரு மாதத்திற்கும் மேலாக காணப்படவில்லை. பல காரணங்களுக்காக அவர் தலைமறைவாகியிருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்த வதந்திகள் தொடர்ந்து பரவி வருவதால், அவர் தனது அதிகாரத்தில் சிலவற்றை தனது தங்கைக்கு மாற்றியுள்ளார் என்று நம்பப்படுகிறது. ஆனால், ஜூலை 27 அன்று, கொரியப் போரின் முடிவின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடந்த இராணுவ விழாவின் போது அவர் தனது சகோதரருடன் காணப்பட்டார். அதற்குப் பிறகு அவரை எங்கும் காண முடியவில்லை என்று கூறப்படுகிறது.
கிம் ஜாங் உன், தனது சகோதரிக்கு பல அதிகாரங்களைக் கொடுத்து விட்டார் என்றும், அவர் சொல்படிதான் அவர் தலைமறைவாகியுள்ளார் என்றும் ஒரு தரப்பு கூறுகிறது. மற்றொரு தரப்போ, தனது சகோதரரின் அதிகாரங்களை தான் பறிப்பதாக எழும் கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே கிம்மின் சகோதரி பொதுப் பார்வையிலிருந்து விலையுள்ளார் என்று கூறுகிறது.
ALSO READ: கோமாவில் வட கொரிய அதிபர் கிம், சகோதரிக்கு அதிகாரம்: தென் கொரிய அதிகாரியின் பகீர் தகவல்!!
அவர்களது மாமா, ஜாங் சாங்-தைக், முன்னர் வட கொரியாவின் மிக சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக இருந்தார். 2011 ல் இறப்பதற்கு முன்னர் கிம்மின் தந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கிம்மின் மாமா அடுத்த தலைவராவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் டிசம்பர் 2013 இல், ஜாங் ஒரு புரட்சியாளர் என்று திடீரென குற்றம் சாட்டப்பட்டார். அவரது பதவிகள் நீக்கப்பட்டு அவர் தூக்கிலிடப்பட்டார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் வட கொரிய அதிபர் கிம்மிற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், 32 வயதான கிம் யோ-ஜாங் தனது சகோதரரிடமிருந்து ஆட்சிப்பொறுப்பை ஏற்பார் என்ற வதந்திகள் பரவின. கிம் இறந்துவிட்டார் என்றும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
கிம் யோ-ஜாங் ஏற்கனவே வட கொரிய அரசாங்கத்தின் மீது குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டுள்ளார் என்று புரிந்து கொள்ளப்படுகிறது.
தென் கொரிய அரசியல்வாதி ஹா டே-கியுங், கிம் யோ-ஜாங் தனது சகோதரரிடமிருந்து அதிகாரத்தைப் பெற்று ஆட்சியை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
ஒரு "அதிகாரக் குழு" இருந்ததாகவும், அரசின் தலைவரான கிம் ஜாங்-உன்னின் அதிகாரம் தனது சகோதரிக்கு "கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டுள்ளது" என்றும் அவர் கூறினார்.
"கிம் ஜாங்-உன் இன்னும் முழுமையான அதிகாரத்தைக் கொண்டுள்ளார். ஆனால் கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், சில அதிகாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டுள்ளன. "கிம் யோ-ஜாங் ஒரு உண்மையான அரசியல் வாரிசாக உருவெடுத்து வருகிறார்” என்பது அவர் கருத்து.
பொருளாதார மற்றும் இராணுவக் கொள்கை குறித்த கூடுதல் அதிகாரம் பல மூத்த அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறைந்த மட்டத்தில், கிம் ஜாங்-உன்னின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதோடு, எந்தவொரு தோல்விகளுக்கும் குற்றம் சாட்டுவதைத் தவிர்க்கவும் இப்படிபட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆய்வாளர் சியோங் சியோங்-சாங், கிம் யோ-ஜாங் 2014 இல், கிம் ஜாங்-உன் மருத்துவ சிகிச்சை பெற்றிருந்தபோது பல அரசாங்க பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார் என கூறினார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் பொலிட்பீரோவிலிருந்து நீக்கப்பட்டார், ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் பணியமர்த்தப்பட்டார்.
2019-ல் வியட்நாமில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான தனது சகோதரரின் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக கிம் யோ-ஜாங் மீண்டும் பேசப்பட்டார். எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்வதற்கான அவரது முயற்சிகளுக்காக பாராட்டப்பட்டார். வட கொரியத் தலைவருக்காகஅவர் ஒரு ரயில் நிலையத்தில் ஆஷ் ட்ரேயுடன் நின்றதையும் உலகம் கண்டது.
ALSO READ: Kim Jong Un: என்ன தான் நடக்கிறது மர்ம தேசமான வடகொரியாவில்..!!!
இந்த ஆண்டு தென் கொரியாவுக்கு எதிரான பிரச்சாரத்தில் அவரது முக்கியத்துவம், கிம் ஜாங்-உன்னின் உதவியாளராக இருப்பதற்கு அப்பாற்பட்டு அவர் இன்னும் முக்கியமானவர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
அண்டை நாடுகளின் விமர்சனங்களுக்கு பதிலாக, அவர் தனது முதல் பொது அறிக்கைகளை வெளியிட்டார்.
அவர் தனது முதல் பொது அறிக்கையில் தென் கொரியாவை "பயமுறுத்தும் குரைக்கும் நாய்" என்று அழைத்தார்.
ஓய்வுபெற்ற அமெரிக்க கர்னல் டேவிட் மேக்ஸ்வெல், கிம் யோ-ஜாங்கைப் பற்றி இன்னும் முழுதும் அறியப்படவில்லை. ஆனால் அவர் ஆட்சிக்கு வந்தால், அவர், தனது சகோதரரை விட மிருகத்தனமானவராக இருக்கக்கூடும் என்பதை நிரூபிக்க முடியும் என்றார்.
“எனது ஊகம் - அக்குடும்பத்தின் வரலாற்றைக் கருத்தில் கொண்டு பார்த்தால் - அவர் இரும்புக்கரம் கொண்டு ஆட்சி புரிவார் என்றே தோன்றுகிறது” என்றார் அவர்.