ISIS பயங்கரவாத அமைப்பினரின் குழந்தைகள் நல்வழியில் செயல்பட வேண்டி, ஆதரவற்றோர் இல்லம் அமைக்கப்படும் என நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் அறிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிரியாவில் ISIS பயங்கரவாதிகள் உள்நாட்டு கலவரம் மேற்கொண்டு வந்த போது லண்டன், பிரான்ஸ், நார்வே ஆகிய நாடுகளில் இருந்து ISIS அமைப்பில் இணைய பலர்  சிரியாவிற்கு சென்றனர். அப்படி இடம்பெயர்ந்த பயங்கரவாதிகளில் சிலர் சமீபத்தில் அமெரிக்கப் படையிடம் சிக்கினர்.


இதன் காரணமாக பிடிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் மனைவி மக்கள் ஆதரவற்று நின்றனர். இந்நிலையில் ஆதரவற்று தவிக்கும் ISIS பயங்கரவாத அமைப்பினரின் குழந்தைகள் நல்வழியில் செயல்பட வேண்டி, ஆதரவற்றோர் இல்லம் அமைக்கப்படும் என நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் என தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்கு நாங்கள் இல்லம் ஏதும் கொடுக்கவில்லை. அவர்களது மனைவிகளுக்கும் இடமில்லை. ஆனால் அவர்களால் வழி தவறி நிற்கும், கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு தான் ஆதரவற்றோர் இல்லம் அமைக்க உள்ளோம்' என தெரிவித்துள்ளார்.


எர்னாவின் இந்த கருத்து பல அரசியல் தலைவர்களுக்கும் அதிர்ச்சி தரும் விதமாக அமைந்துள்ளது. இது குறித்து நார்வே நாட்டின் முன்னாள் நீதித்துறை அமைச்சர் கூறுகையில், 'மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். ISIS பயங்கரவாத பயிற்சி பெற்ற சிறுவர்களுக்கு ஆதரவு தருவது போல் இச்செயல் உள்ளது. இது மிகவும் சிக்கலானது மற்றும் ஆபத்தானது' என தெரிவித்துள்ளார்.


எர்னாவின் இந்த திட்டம் குறித்து துணை ஜனாதிபதி அபித் ராஜா கூறுகையில், 'எத்தனையோ ISIS குழந்தைகள் வழி தவறி உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ஆதரவு அளிக்கப்பட வேண்டும். அனாதைகளுக்கும், தாயுடன் வாழும் குழந்தைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆனால், குழந்தைகள் அனைவரையும் சமமாக நடத்திட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.