நாஸ்ட்ராடாமஸின் பீதியூட்டும் கணிப்புகள்: மூன்றாம் உலகப்போர் மூளுமா..!!
Nostradamus Predictions: ஹிட்லரின் ஆட்சி, இரண்டாம் உலகப் போர், 9/11 தாக்குதல்கள் மற்றும் பிரெஞ்சுப் புரட்சி உட்பட நாஸ்ட்ராடாமஸ் கணிப்புகளில் 85 சதவீதம் உண்மையாகிவிட்டது.
உலகின் தலைசிறந்த தீர்க்கதரிசியாக கருதப்படும் நாஸ்ட்ராடாமஸ், ஜெர்மனியில் 1503, டிசம்பர் 14ம் தேதி பிறந்து, 1566 ஜூலை 6ம் தேதி இறந்தார். அவரது பல கணிப்புகள் உண்மையாகியுள்ளன. ஹிட்லரின் ஆட்சி, இரண்டாம் உலகப் போர், 9/11 தாக்குதல்கள் மற்றும் பிரெஞ்சுப் புரட்சி உட்பட அவரது கணிப்புகளில் 85 சதவீதம் உண்மையாகிவிட்டது. நாஸ்ட்ராடாமஸ் 500 ஆண்டுகளுக்கு முன்பே 2023ம் ஆண்டில் நடக்கப் போகும் நிகழ்வுகள் குறித்து என்ன கணித்திருக்கிறார் என்பதை அறிந்தால் பலரும் அதிர்ச்சியடைவார்கள்.
நாஸ்ட்ராடாமஸ் ஒவ்வொரு ஆண்டுற்கும் வெவ்வேறு கணிப்புகளை வழங்கியுள்ளார். இதேபோல், நோஸ்ட்ராடாமஸ் 2023 ஆம் ஆண்டிற்கான பல அதிர்ச்சியூட்டும் கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
மனிதர்கள் செவ்வாய் கிரகம் செல்வது எப்போது?
நோஸ்ட்ராடாமஸ் செவ்வாய் கிரகத்தைப் பற்றி கணித்து, இந்த சிவப்பு கிரகத்தில் மனிதர்கள் எப்போது காலடி எடுத்து வைப்பார்கள் என்று கூறியிருந்தார். நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகளில், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவது தொடர்பான பணியில் 2023 ஆம் ஆண்டில் ஒரு பெரிய வெற்றியை அடைய முடியும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க், செவ்வாய் கிரகத்தில் மனிதக் காலனி அமைப்பது குறித்து பேசியதோடு, 2029-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார் . 2023 ஆம் ஆண்டில், எலோன் மஸ்க் செவ்வாய் கிரகம் தொடர்பான பணியை அறிவிக்கக் கூடும் என்பதியே நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் கூறுகின்றன.
மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்தில் சூரிய ஒளிவட்ட புகைப்படம்! நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவரின் சாதனை
மூன்றாம் உலகப் போர் பற்றிய கணிப்புகள்
2023 ஆம் ஆண்டு பெரும் போர் நடக்கும் என நோஸ்ட்ராடாமஸ் தனது கணிப்பில் குறிப்பிட்ட்டுள்ளார். 'ஏழு மாதங்கள் பெரும் போர் நடக்கும், தீய செயல்களால் மக்கள் இறப்பார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். இது மூன்றாம் உலகப் போர் தொடர்பான கணிப்பு என்று பலர் கருதுகின்றனர். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் 2023ல் மூன்றாம் உலகப் போராக மாறக்கூடும் என்றும் சிலர் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ள திரையரங்குகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ