பொதுவாக பனிக்காலம் துவங்கி விட்டால் குளிருக்கு பயந்து போர்வைக்குள் அடங்கிக்கொள்ளும் பெண்களை தான் நாம் பார்த்திருப்போம், ஆனால் உக்ரைனை சேர்ந்த அழகி ஒருவர் சற்று மாறுபட்டவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உக்ரைனை சேர்ந்து 32 வயது அழகி இன்னா விளாடிமிர்ஸ்காயா. இவரது இளமையின் ரகசியத்தினை குறித்து சமீபத்தில் மனம் திறந்துள்ள இவர் தெரிவிக்கையில்... "பனி காற்றில் நிர்வாணமாக நடப்பதும், பனி நீரில் முழுவதுமாக மூழ்கி குளிப்பதுமே தன் இளமையின் ரகசியம்" என தெரிவித்துள்ளார்.



கடந்த 9 ஆண்டுகளாக இந்த பழக்கத்தினை இவர் தொடர்ந்து வருவதாக இவர் தெரிவித்துள்ளரா. மேலும் வாரம் ஒருமுறை தன் கணவருடன் சேர்ந்து ஈரோப்பின் டின்னர்ப் நதியின் கரையில் நிர்வாணமாக பனிக்காற்றில் நடப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவர் குறிப்பிட்டுள்ள டின்னர்ப் நதி ஆனது சுமார் 15 டிகிரி பேரன்ஹீட் குளிர்பதத்தினை வழக்கமாக கொண்டிரும் என்பது குறிப்பிடத்தக்கது.


இவ்வாறு செய்வதால் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்க படுவதாகவும், உடலின் உள்ளுறுப்புகள் மிகச்சிறப்பாக செயல்பட உதவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பழக்கத்தினை இவர் பனி பிரதேசங்களில் வாழும் மிருகங்களிடம் இருந்தே கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.



பனிப் பிரதேசங்களில் வசிக்கும் மிருகங்களின் தோல்கள் மிகவும் உறுதியாகவும், மிளிரும் வகையில் மாறுவதற்கு காரணம் இந்த பனிக் காற்று தான், அதனால் தான் இந்த பனிகாற்றை பயன்படுத்தி எனது அழகினை மேம்படுத்திக்கொள்ள விரும்பினேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


 



அதே நேரத்தில் இந்த குளியலினை தான் தொடர்ந்து எடுத்துக் கொள்வதில்லை எனவும், பனி நீரில் மூழ்கியிருக்கையில் கூட குறிப்பிட்ட நேரம் வரை இருந்துவிட்டு விரைவில் தனது உடலை உலற வைத்துவிடுவேன் தேரிவித்துள்ளார்.