October 01: Top 10 இன்றைய முக்கிய உலகச் செய்திகள்; இந்தியா முதல் இங்கிலாந்து வரை...
அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...
புதுடெல்லி: அமெரிக்கா, சீனா, ரஷ்யா, அர்மீனியா என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...
இந்தியா-சீனா எல்லை விவகாரங்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான குழுவின் (WMCC) 19 ஆவது கூட்டம் நடைபெற்றது.
இந்தியாவில் 52,73,201 பேர் கொரோனா வைரஸ் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். மத்திய குடும்பநல அமைச்சகத்தின் தரவுகளின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 85,376 பேர் குணமடைந்துள்ளனர். மீட்பு வீதம் 83.53 சதவீதமாக ஆக உள்ளது
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் திறன் வளர்ப்புக்கான கூட்டாளித்துவத்தை மேலும் வலுப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன. கவனம் செலுத்தப்பட வேண்டிய அம்சங்களுக்கான திட்டத்தை வகுப்பதற்காக கூட்டு செயற்குழு அமைக்க ஒப்புதல்.
தொழிலாளர்களை கட்டாயமாக பணிபுரிய செய்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளுக்குப் பின்னர், உலகின் மிகப்பெரிய கச்சா பாமாயில் உற்பத்தி செய்யும் நிறுவனமான மலேசிய பாமாயில் உற்பத்தியாளர் எஃப்.ஜி.வியிடமிருந்து பாமாயில் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
ஆர்மீனியா, அஜர்பைஜான் மோதலை அடுத்து, கராபக் (Karabakh) பகுதியில் 'உடனடியாக' போர்நிறுத்தம் செய்ய வேண்டுமென்று அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் வலியுறுத்துகின்றன.
சர்ச்சைக்குரிய எல்லைகள் தொடர்பாக ஐ.நாவின் மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளை லெபனானும் இஸ்ரேலும் ஒத்தி வைத்தன.
COVID-19 ஐக் கட்டுப்படுத்திய பின்னர், சீனா 'கோல்டன் வீக்' (golden week) தேசிய விடுமுறையைத் தொடங்குகிறது
Proud Boys மீதான விவகாரத்தில் டிரம்ப் பின்வாங்குகிறார்; பிடனுடனான விவாத நிகழ்ச்சி 'தேசிய சங்கடம்' (national embarrassment) என்று அழைக்கிறார்.
Brexit: உள்நாட்டு சந்தை மசோதா தொடர்பாக இங்கிலாந்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் சட்ட நடவடிக்கை எடுக்கிறது
'Putin is behind the crime': 'குற்றத்தின் பின்னணியில் புடின்' என்று நேர்காணல் ஒன்றின்போது அலெக்ஸி நவல்னி சாடினார்.
செய்தி வெளியீட்டாளர்களின் உள்ளடக்கத்திற்காக Google 1 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை செலுத்த வேண்டும்.
நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய நவாஸ் ஷெஃரீப்புக்கு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் கண்டனம்.
'Getting warmer': காலநிலை மாற்றத்தில் மனிதர்களின் பங்கு இருப்பதை டிரம்ப் ஒப்புக்கொள்கிறார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR