Viral: வித்தியாசமான முறையில் தன் தாயை வரவேற்ற சிறுவன்!
பணிநிமித்தமாக வெளியூர் சென்று வந்த தன் தாயினை வித்தியாசமான வாக்கியங்கள் கொண்டு அவரது மகன் வரவேற்ற சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!
பணிநிமித்தமாக வெளியூர் சென்று வந்த தன் தாயினை வித்தியாசமான வாக்கியங்கள் கொண்டு அவரது மகன் வரவேற்ற சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!
பார்பரா நில்சன், ஓக்கலமா மாகனத்தை சேரந்தவ இவர் பணி விவகாரமாக வெளியூர் சென்று வீட்டுக்கு திரும்பியுள்ளார். அவரை வரவேற்க அவரது கணவர் மற்றும் மகன் விமான நிலையத்தில் காத்திருந்துள்ளனர்.
தன் தாயின் வருகையினை சிறப்பாக மாற்ற விரும்பிய மகன், விமான நிலையத்தில் தன் தாய்காக வித்தியாசமான வாக்கியங்கள் கொண்டு பலகை ஒன்றை கையில் ஏந்தி நின்றுள்ளார். இந்த பலகையில் "Welcome Home from PRISON mom" என குறிப்பிட்டு இருந்தார். இதன் அர்த்தம் சிறையில் இருந்து வீடு திறும்பம் அம்மாவை வரவேற்கின்றேன் என்பதாகும்.
சிறுவனை பொருத்தமட்டில் தாயின் பணி அவருக்கு சிறை வாசம் போன்றது என குறிப்பிட்டுள்ளார். சிறுவனின் இந்த செயல்பாட்டிற்கு உதவும் வகையில் அவரது தாயின் நண்பர்களும் இந்த விஷயத்தில் சிறுவனுக்கு உதவியுள்ளனர்.
முன்னதாக Barbara Nielsen தன் பணி முடித்து வீடு திரும்பதினை தான் விமான நிலையம் வந்த பின்னரே குடும்பத்தாருக்கு தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தினை அறிந்த அவரது நண்பர்கள் அவரின் பயணத்தினை மறக்கமுடியாத நிகழ்வாக மாற்ற இந்த செயல்பாட்டிற்கு திட்டமிட்டுள்ளனர். பின்னர் அவரது மகனை வைத்தே திட்டத்தினை செயல்படுத்தியுள்ளனர்.
இந்த நிகழ்வின் புகைப்படத்தினை Barbara Nielsen தனது முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போதுவரையில் 85 ஆயிரத்துக்கும் மேல் பகிரப்பட்டுள்ளது!