117-வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி
இத்தாலி நாட்டை சேர்ந்த உலகின் மிகவும் வயதான மூதாட்டி எம்மா மோரேனோ இவர் தனது 117-வது பிறந்தநாளை நேற்று சிறப்பாக கொண்டாடினார்.
எம்மா மோரானோ இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். இவர் 1899-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பிறந்தார். எம்மா, 19-வது நூற்றாண்டில் உயிர் வாழும் கடைசி நபர் என்று கருதப்பட்டு வருகிறது. 19, 20, 21 ஆகிய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியின் எம்மா மோரேனோவுக்கு நேற்று 117-வது பிறந்தநாள். வெர்பானியா பகுதியில் தனது நண்பர்களுடன் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினார். இவ்வளவு நாள் உடல் நலத்துடன் வாழும் எம்மா, ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகளும் சில பிஸ்கட்டுகள் மட்டும் தான் சாப்பிடுகிறார்.
இவர் தனது 65-வது வயது வரை ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தார். மேலும் இவர் 26 வயதாக இருந்த போது இவருக்கு திருமணம் நடந்தது. இவருக்கு 1937-ம் ஆண்டு ஒரு குழந்தை பிறந்தது. அது பிறந்து 6 மாதங்களுக்குள் இறந்து விட்டது. இந்நிலையில் பல ஆண்டுகளாகவே தனியாக வாழ்ந்து வருகிறார் எம்மா. இந்நிலையில் அவர் தனியாக இருந்தாலும் அவரை பார்க்க நிறைய பேர் வந்து கொண்டே இருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.