வியன்னா: மத்திய வியன்னாவில் (Vienna) திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடு பரிமாற்றத்தில் ஒருவர் கொல்லப்பட்டார், பலர் காயமடைந்தனர். இது மத்திய ஜெப ஆலயத்திற்கு அருகே நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்று ஆஸ்திரிய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆறு இடங்களில் தாக்குதல் நடந்ததாகவும் பல்வேறு நபர்கள் இது தொடர்பாக சந்தேகிக்கப்படுவதாகவும் வியன்னா போலீசார் ட்விட்டரில் தெரிவித்தனர்.


மத்திய வியன்னாவின் ஒரு பெரிய பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, அங்கு பாதுகாப்பு படைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


உள்துறை அமைச்சர் கார்ல் நெஹம்மர் ஆஸ்திரிய ஒளிபரப்பாளரான ORF இடம் இந்த தாக்குதல் பல நபர்களால் நடத்தப்பட்டதாக நம்பப்படுவதாகவும், ஆறு இடங்களும் மத்திய ஜெப ஆலயம் உள்ள வீதிக்கு அருகிலேயே உள்ளன என்றும் கூறினார்.


"இது ஒரு வெளிப்படையான பயங்கரவாத தாக்குதல் (Terrorist Attack) என்று நாங்கள் நம்புகிறோம் என்பதை இப்போது நான் உறுதிப்படுத்த முடியும்," என்று அவர் கூறினார்.


"இதில் பல குற்றவாளிகள் சம்பந்தப்பட்டு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். இதில் துரதிர்ஷ்டவசமாக பலர் காயமடைந்துள்ளனர், இறப்பு பற்றியும் செய்திகள் வருகின்றன” என்றார் அவர்.


ALSO READ: ஆப்கானிஸ்தானின் காபுல் பல்கலைகழகத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 19 மாணவர்கள் பலி


ஆம்புலன்ஸ் சேவையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் பலர் காயமடைந்தனர் என்றும் கூறினார். சந்தேக நபர்களில் ஒருவர் மற்றும் ஒரு பார்வையாளர் சுட்டுக் கொல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் ஒரு போலீஸ் அதிகாரியும் அடங்குவதாக உள்ளூர் செய்தி நிறுவனம் ஏபிஏ தெரிவித்துள்ளது.


"இன்னர் சிட்டி மாவட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காயமடைந்தவர்கள் பலர் உள்ளனர். அனைத்து பொது இடங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்திலிருந்து விலகி இருங்கள்” என்று காவல்துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.


யூத சமூகத் தலைவர் ஒஸ்கார் டாய்ச் ட்விட்டரில், வியன்னா ஜெப ஆலயம் மற்றும் அதை ஒட்டிய அலுவலகங்கள் தாக்குதலுக்கு இலக்காக இருந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும், அந்த நேரத்தில் அவை மூடப்பட்டிருந்ததாகவும் கூறினார்.


துப்பாக்கி ஏந்திய ஒருவர் தெருவில் துப்பாக்கிச் சூடு நடத்தி கூச்சலிடும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன.


வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக ஊடகங்கள் மூலம் பகிர வேண்டாம் என்று வியன்னா போலீசார் மக்களை வலியுறுத்தினர். "இது போலீஸ் படைகளையும் பொதுமக்களையும் பாதிக்கும்" என்று அவர்கள் ட்விட்டரில் தெரிவித்தனர்.


1981 ஆம் ஆண்டில், ஒரே ஜெப ஆலயத்தில் இரண்டு பாலஸ்தீனியர்கள் நடத்திய தாக்குதலின் போது இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர். 1985 ஆம் ஆண்டில், ஒரு பாலஸ்தீனிய தீவிரவாதக் குழு வியன்னா விமான நிலையத்தை கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளால் தாக்கியதில் பொதுமக்களில் மூன்று பேர் இறந்தனர். ஆகஸ்ட் மாதம், நாட்டின் இரண்டாவது நகரமான கிராஸில் ஒரு யூத சமூகத் தலைவரைத் தாக்க முயன்றதாக சந்தேகிக்கப்படும் 31 வயதான சிரிய அகதியை அதிகாரிகள் கைது செய்தனர். 


ALSO READ: கார்ட்டூன் சர்ச்சை: இப்போது இந்த நாட்டில் உள்ள இந்துக்கள் ட்வீட் செய்து உதவி கோரினர்..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR