ஆப்பிரிக்காவின் காங்கோவில் சுமார் 2 மில்லியன் குழந்தைகள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானத் தலைவரான மார்க் லோட்காக் மற்றும் காங்கோவின் மோசமான சூழ்நிலையில் நாட்டிற்கு உதவ உதவித் தொகையை வழங்குவிரும்பும் நன்கொடையாளர்கள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்புக்கு முன்கூட்டியே வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளன.


ஐ.நா.வின் செய்தித் தொடர்பாளர் ஜென்ஸ் லாரெக் ஜெனீவாவில் ஒரு மாநாட்டில் இதுகுறித்து குறிப்பிடுகையில், "DRC-யில் ஒரு பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளோம்... இருந்தப்போதிலும் இந்நிலைக்கு காலம் தான் பதில் சொல்லும்" என குறிப்பிட்டுள்ளார். 


மத்திய ஆபிரிக்க நாட்டில் உள்ள கொந்தளிப்புக்கான முக்கிய காரணங்கள், இனவாத வன்முறை மற்றும் ஜனாதிபதி ஜோசப் கபிலாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆகும்.


ஹெமா ஹேடர்ஸ் மற்றும் வடக்கு இட்யூரி மாகாணத்தில் லென்டு விவசாயிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த வார இறுதியில் மட்டும் குறைந்தது 79 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் காங்கோவில் அதிபர் ஜோசப் கபிலாவுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருவதாலும், வடக்கு இதூரி பகுதிக்கு உணவுப் பொருட்கள் அனுப்ப விதிக்கப்பட்டுள்ள தடையாலும் அங்குள்ள மக்கள் பசியால் தவிப்பதாக ஐநா சபையின் மனிதநேயப் பிரிவு தலைவர் மார்க் லோகிக் தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக அப்பகுதியில் இதுவரை சுமார் 2 மில்லியன் குழந்தைகள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என எச்சரித்துள்ளார் மார்க் லோகிக்!