இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் அஜய் பிசாரியா பாக்கிஸ்தானின் குருத்துவாரா பஞ்ச சாஹிப் வழிபாட்டு தளத்தில் தடத்து நிறுத்தப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாக்கிஸ்தானின் ராவல்பிண்டி அருகே உள்ள குருத்துவாரா பஞ்ச சாஹிப் வழிபாட்டு தலத்திற்கு பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் அஜய் பிசாரியா தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது அவரை வழிபாட்டு தலத்திற்கு செல்வதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இச்சம்பவத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளது.



அஜய் பிசாரியா, குருத்வாரா பஞ்ச சாஹிப் செல்வதற்காக உரிய முன் அனுமதியை பெற்றுள்ளார். மேலும் அங்கு சீக்கிய புனித பயணிகளையும் அவர் சந்திக்க இருந்த நிலையில், திடீரென அவருக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்ததுள்ளதாக தெரிகிறது. 


இதனால் அவர் தன் மனைவியுடன் மீண்டும் இஸ்லாமாபாத் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் கவனத்திற்கு இந்தியா எடுத்துச் சென்றுள்ளதுடன், தனது கண்டனத்தையும் பதிவுசெய்துள்ளது.


இந்தாண்டில் இரண்டாவது முறையாக இதேப்போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம், குருதுவாரா பகுதியில் இருக்கும் சீக்கிய புனித யாத்திரகர்களை சந்திக்க துணை தூதரக அதிகாரிகள் சென்றபோது அவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.