2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலில் பாக்., பங்கு உள்ளது - நவாஷ் ஷெரிப்!
2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாக்கிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரிப் தெரிவித்துள்ளார்!
2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாக்கிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரிப் தெரிவித்துள்ளார்!
கடந்த 2008-ம் ஆண்டு, நவம்பர் 26-ம் நாள் மும்பை ரயில் நிலையம், ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுட்டு கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்வத்தில் பாக்கிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக நவாஷ் ஷெரிப் ஒப்புக்கொண்டுள்ளார்.
முன்னதாக இத்தாக்குதலில் ஈடுபட்டது பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புகள் என இந்தியா குற்றம் சாட்டியது. இதற்கான ஆதாரங்களையும் திரட்டி பாகிஸ்தானிடம் இந்தியா அளித்தது. இச்சம்பவம் தொடர்பான வழக்கு ராவல்பிண்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பதவியை இழந்தவருமான நவாஷ் ஷெரீப் நாளேடு ஒன்றிர்க்கு கொடுத்த பிரத்யேகப் பேட்டியில் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இப்பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது...
''பாகிஸ்தானில் இன்னும் தீவிரவாத அமைப்பு செயல்பட்டு கொண்ட தான் இருக்கின்றன. இந்தத் தீவிரவாத குழுக்கள் எல்லை தாண்டிச் சென்று மும்பையில் அப்பாவி மக்கள் 160 பேரை சுட்டுக்கொல்ல எப்படி அனுமதிக்க இயலும். இதுதான் பாகிஸ்தான் கொள்கையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இதுபோன்ற செயலை ஒருபோதும் பாகிஸ்தான் அனுமதிக்கக் கூடாது. இதைத்தான் ரஷிய அதிபர் விளாதிமிர் புதினும், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும் கோருகிறார்கள். இதற்கு பதில் அளிக்க முடியாமல் பாகிஸ்தான் தவிக்கின்றது.
ஒரு நாட்டுக்குள் ஒரு அரசுதான் இருக்க முடியும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று அரசுகள் ஒன்றாகச் செயல்பட முடியாது. இப்படிப்பட்ட செயல்பாடுகள் தடுக்கப்பட வேண்டும். ஒரு அரசியலமைப்பு சட்டம் ஒரு அரசுதான் இயங்க வேண்டும்.'' என தெரிவித்துள்ளார்.