பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் ஆதரவாளர்கள் 3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் பயங்கரவாத அமைப்புக்கு உதவியதாக பலர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ஏராளமான பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.


இதில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டியதாக கைது செய்யப்பட்ட இப்திகார், முகமது அஜ்மல் மற்றும் பிலால் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நேற்று நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் மூன்று பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து  நீதிமன்றம் உத்தரவிட்டது. 


இந்நிலையில் கைது செய்யபட்ட 3 பேரும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.