ஜூலை 25 பாகிஸ்தான் பொதுத்தேர்தல் - இந்தியாவுக்கு என்ன பயன்? ஒரு அலசல்
பாகிஸ்தான் பொதுத்தேர்தல் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் பொதுத்தேர்தல் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்தமுறை பாகிஸ்தான் பொதுத்தேர்தலை உலக நாடுகளை அதிக கவனமாக கவனித்து வருகிறது. ஏனெனில் கடந்த 2013 ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி என் வெற்றி பெற்று நவாஸ் ஷெரிப் பிரதமராக தேர்ந்தெடுக்கபட்டார். ஆனால் இந்த முறை நவாஸ் ஷெரிப் சிறையில் உள்ளார். இதனால் இந்த தேர்தல் முக்கிய கவனம் பெற்றுள்ளது.
இரண்டாவது முறையாக ஆட்சி பிடிக்க வேண்டும் என நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சியும், முதல் முறையாக ஆட்சி கட்டிலில் அமர பாகிஸ்தான் முன்னால் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியும் அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டனர். இந்த இரண்டு கட்சிக்கும் நேரடியாகவே பலத்த போட்டி ஏற்பட்டு உள்ளது. நவாஸ் ஷெரிப் சிறை சென்றுள்ளதால், பாகிஸ்தான் முஸ்லிம் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அவருடைய சகோதரர் ஷெபஸ் ஷெரிப்பை முன்னிறுத்தி உள்ளனர். இந்த இரண்டு கட்சியை அடுத்து, அதிக பேசப்படும் இன்னொரு கட்சி பெனாசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி. இந்த கட்சியும் நாடு முழுவதும் பிரசாரத்தை மேற்கொண்டது.
பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தேர்தல் கருத்து கணிப்புகளில் இம்ரான்கான்கே மக்கள் மத்தியில் அதிக ஆதரவு இருப்பதாகவே செய்திகள் வெளியாகின. 272 இடங்களுக்கு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெறுகிறது. அதில் 141 இடங்கள் பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது. இங்கு அதிக இடங்களை பிடிக்கும் கட்சியே வெற்றி பெற வாய்ப்பு அதிகம் இருப்பதால், பாகிஸ்தானில் எந்தக் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பதை தீர்மானிக்கும் மாநிலமாக பஞ்சாப் திகழ்கிறது.
இம்முறை பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் பழங்குடியினரருக்கும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது என்பது சிறப்பு. நாளை காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின் போது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 200-க்கு அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதனால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பதட்டமான வாக்கு சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஊழல் குற்றச்சாட்டில் சிறை தண்டனை பெற்று வரும் நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி வெற்றி பெறுமா? அல்லது முன்னால் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி வெற்றி பெறுமா? என்று நாளை மக்கள் தீர்மானிப்பார்கள்.