பாகிஸ்தானில் அடுத்த பிரதமருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதற்கான ஓட்டு பதிவு நேற்று காலை துவங்கி மாலை முடிவடைந்தது. மேலும் ஓட்டு எண்ணிக்கையானது இரவு முழுவதும் நடைபெற்றது. அந்த வகையில் தற்போது இம்ரான் கான் கட்சி முன்னிலை வகித்துள்ளது. நாட்டின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் கட்சி பின்னுக்கு தள்ளப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகளில் வென்றாக வேண்டும் என்ற நிலையில், 


PML-N: 64
PTI: 112
PPP: 44
AAT: 00
Others: 50


இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதால் இந்த தேர்தல் முடிவுகளை ஏற்கப்போவதில்லை
என்றும், தேர்தல் முடிவுகளை எதிர்த்து பல கட்சிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் நவாஸ் ஷரீப் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், தேர்தலில் எவ்வித முறைககேடும் நடைபெறவில்லை. இம்ரான்கான் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர். 


இந்நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெறும் கட்சியே பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் பதவியில் அமரும்.