பாக்கிஸ்தான் சர்வதேச விமான விபத்து: 48 பேர் பலி
பாகிஸ்தான் சித்ராலில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி சென்ற பாக்கிஸ்தான் சர்வதேச விமானம் அபோட்டாபாத் மாவட்டமான ஹவேலியன் என்ற இடத்தில் நொறுங்கி விழுந்தது 48 பேர் மரணமடைந்தனர்.
பாகிஸ்தானின் சித்ராலில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி பாகிஸ்தானுக்கு சொந்தமான விமானம் PK-661 என்ற பயணிகள் விமானம் சென்றுக் கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 47 பயணிகள், 5 குழு மெம்பர்ஸ் மற்றும் ஒரு இன்ஜினியர் பயணித்து இருந்தார்.
அந்த விமானத்தில் பாகிஸ்தான் பிரபல பாடகர் ஜூனாய்ட் ஜாம்சத், அவரது மனைவி, சித்ரால் துணை கமிஷனர்,
ஒசாமா வராய்ச் மற்றும் மூன்று வெளிநாட்டவர்கள் இருந்தனர்.
பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள சிட்ரால் என்ற இடத்தில் இருந்து நேற்று மாலை 3.30 மணிக்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் இஸ்லாமாபாத்தை 4.40 மணிக்கு அடைய வேண்டும்.
ஆனால் அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திடீரென ரேடார் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டது.
விசாரணையில் அந்த விமானம் மலையில் மோதி நோரிங்கியது என்று தகவல் வந்தது.
அசார் நவாஸ், தலைமை தகவல் அதிகாரி இந்த துயர சம்பவத்தை குறித்து டிவீட் செய்துள்ளார்.
அவசர எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது - 0092-21-99044890, 0092-21-99044376 மற்றும் 0092-21-99044394.
2012-ம் ஆண்டு இஸ்லாமாபாத் நோக்கி வந்த விமானம் விபத்துக்குள்ளானதில் 127 பேர் இறந்தனர்.
2010-ம் ஆண்டு பலத்த மழையால் இஸ்லாமாபாத் அருகே விமானம் விபத்தில் சிக்கி 152 பேர் பலியாகினர்.
1992-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டு நோக்கி சென்ற விமானம் மலையில் மோதி நொறுங்கியதில் 167 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.