’பாக்கிஸ்தான்’ இனி ’டெரரிஸ்தான்’: ஐ.நா-வில் இந்தியா பதிலடி!
பயங்கரவாததிற்கான அடிப்படை தளமாக பாகிஸ்தான் இருக்கின்றது, எனவே பாக்கிஸ்தானை ’டெரரிஸ்தான்’ என இனி அழைக்கலாம் என ஐநா சபையினில் தனது கடுமையான விமர்சனத்தை இந்தியா முன்வைத்துள்ளது.
ஜெனீவா: பயங்கரவாததிற்கான அடிப்படை தளமாக பாகிஸ்தான் இருக்கின்றது, எனவே பாக்கிஸ்தானை ’டெரரிஸ்தான்’ என இனி அழைக்கலாம் என ஐநா சபையினில் தனது கடுமையான விமர்சனத்தை இந்தியா முன்வைத்துள்ளது.
ஜெனீவாவில் நடைபெரும் ஐக்கிய நாடுகள் சபை நடைபெற்று வருகின்றது. இதில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் கான் அப்பாஸி, "பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாதத்தை இந்தியா தூண்டி வருகின்றது" என தனது கருத்தினைப் பதிவு செய்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையினில் ஐநா-வுக்கான இந்திய தூதர் ஈனம் கம்பீர் “சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக பாகிஸ்தான் இருக்கின்றது. இத்தகு எல்லை தாண்டும் பயங்கரவாதத்தினால் இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முடியாது. இந்தியாவின் ஒரு பகுதியாக எப்போதும் ஜம்மு காஷ்மீர் இருக்கும் என்பதை பாகிஸ்தான் உணரந்து தான் ஆகவேண்டும்" என தெரிவித்தார். மேலும் பாக்கிஸ்தானை ’டெரரிஸ்தான்’ என இனி அழைக்கலாம் எனவும் விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுதந்திரமாக உலா வரும் நிலையினில் இந்தியாவில் மனித உரிமைகள் பற்றி பாகிஸ்தான் பேசுவது வேடிக்கை.
மேலும் ‘உலகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதத்தினை கைவிட பாகிஸ்தானுக்கு தான் இன்னும் அறிவுரைகள் தேவைப் படுகின்றது’ எனவும் கம்பீர் தெரிவித்துள்ளார்