புதுடெல்லி:  இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த பாகிஸ்தானின் சதி திட்டம் அம்பலமாகியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர் குறித்த பொய்களைப் பரப்ப, பாகிஸ்தான் தூதரகங்களை ஈடுபடுத்தியுள்ளது. அக்டோபர் 27-ம் தேதி அமெரிக்கா உட்பட ஐரோப்பாவின் பல நாடுகளில் இந்தியாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக ஜீ மீடியாவிடம் கிடைத்த ஆவணங்களின் மூலம் அம்பலமாகியுள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தானில் அக்டோபர் 27ஆம் தேதி காஷ்மீர் கறுப்பு தினமாக அனுசரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான இந்த சதி திட்டங்களை வெற்றியடையச் செய்வதற்காக, பாகிஸ்தான் சமீபத்தில் முக்கிய கூட்டம் நடத்தியது, அதில் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் உட்பட பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அதிகாரிகள் இருந்தனர். இக்கூட்டத்தில், சதி திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கான பல உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 27ஆம் தேதியை பாகிஸ்தான் 'காஷ்மீர் கறுப்பு தினமாக' கொண்டாட திட்டம் தீட்டப்பட்டுள்ளது


பாகிஸ்தானின் சதி திட்டம் 


அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சிகளின் பட்டியலை பாகிஸ்தான் (Pakistan) தனது அனைத்து தூதரகங்களுக்கும் பேக்ஸ் மூலம் அனுப்பியுள்ளது. இதற்காக, சிறப்பு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்திய பாதுகாப்புப் படையினருக்கு எதிரான போலி மனித உரிமை மீறல் வழக்குகள் முன்னிலைப்படுத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் மறியல் போராட்டங்களை நடத்தி, ஊடகங்களில் செய்திகள் வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது . இந்த தர்ணா ஆர்ப்பாட்டங்களை வெற்றிகரமாக நடத்த இஸ்லாமாபாத்தில் இருந்து அனைத்து பாகிஸ்தான் தூதரகங்களுக்கும் நிதி அனுப்பப்பட்டுள்ளது.


ALSO READ | இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றி இஸ்லாமின் வெற்றி: பாகிஸ்தான் அமைச்சர்


இதனுடன் காஷ்மீர் குறித்த போலி செய்திகளை பரப்ப சமூக வலைதளங்களான, ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஹேஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்டிங் செய்யவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்காக பல காஷ்மீர் பிரிவினைவாதிகளை பாகிஸ்தான் அழைத்துள்ளது. இந்த பிரிவினை வதிகளின் குரல் தான், பொதுவான காஷ்மீரிகளின் குரல் என்பதை உலகிற்கு எடுத்து சொல்ல வேண்டும் என்பதே இதன் நோக்கம்.


இந்த ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி, காஷ்மீர் ஒற்றுமை தினத்தை வெற்றிகரமாக கொண்டாட பாகிஸ்தானிய அமெரிக்க சமூகத்தின் உதவியுடன், அமெரிக்காவின் நியூயார்க்கில் அமைந்துள்ள அதன் தூதரக ஜெனரல் அலுவலகத்திற்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இதேபோன்ற பேக்ஸ் செய்தியை அனுப்பியது. இதனுடன், நியூயார்க்கில் உள்ள அனைத்து டாக்சிகள் மற்றும் டிரக்குகள் காஷ்மீர் ஒற்றுமை தினத்தன்று இந்தியாவிற்கு எதிராக விளம்பர பிரச்சாரங்கள் மற்றும் வெபினார்களை நடத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.


ALSO READ |  பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து சொதப்பும் ரோஹித் சர்மா!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR