VIDEO: இந்தியா-பாகிஸ்தான் போர் அக்டோபர்- நவம்பரில் நடைபெறும் -PAK அமைச்சர்
அக்டோபர் பிற்பகுதியில் அல்லது நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடக்கும் என்று பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி / இஸ்லாமாபாத்: காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவை நீக்கியதன் மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது அமைச்சர்கள் கட்டுப்பாடற்ற மற்றும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை தொடர்ந்து அளித்து வருகின்றனர். இப்போது பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அக்டோபர் பிற்பகுதியில் அல்லது நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடக்கும் என்று கூறியுள்ளார். ராவல்பிண்டியில் ஊடகங்களுடன் பேசும் போது அவர் இந்த எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டார்.
ஊடகங்கள் மத்தியில் பேசிய ஷேக் ரஷீத், 'அக்டோபர் பிற்பகுதியில் அல்லது நவம்பர் - டிசம்பர் மாதங்களில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடக்கும்' என்று கூறினார். இதற்காக தான் நான் சமூகத்தை ரெடி செய்ய வந்துள்ளேன். ஒருவேளை இது ஒரு போர் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை, ஆனால் மோடியைக் குறித்து அறிந்துக்கொள்வதில் நான் செய்த தவறை போன்றொரு தவறை என் வாழ்வில் செய்ததில்லை.
அவர் மேலும் கூறுகையில், உண்மையில் 24-25 கோடி முஸ்லிம்கள் பாகிஸ்தானை பக்கம் நிற்கிறார்கள். இன்று நாம் நமது இஸ்தலாஃபத்தை (பரஸ்பர வேறுபாடுகள்) மறந்துவிட்டு, படிப்படியாக காஷ்மீரின் குரலில் சேர வேண்டும். அனைவரும் தோளோடு தோள் சேர்த்து, கைகளோடு கைகளை இணைத்து ஒன்று படவேண்டும், இல்லையெனில் ஒருபோதும் இந்த நாட்கள் நம்மை மன்னிக்காது எனக் கூறினார்.