#Article370: வான்வழி பாதையை மூட உத்தரவிட்டது பாகிஸ்தான்!
இந்தியாவுடனான தூதரக உறவுகளை முறித்து கொண்ட பாகிஸ்தான் தற்போது தனது வான்வழி பாதையை மூட உத்தரவிட்டுள்ளது!
இந்தியாவுடனான தூதரக உறவுகளை முறித்து கொண்ட பாகிஸ்தான் தற்போது தனது வான்வழி பாதையை மூட உத்தரவிட்டுள்ளது!
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 370 மற்றும் 35-ஏ பிரிவுகளை இந்தியா திரும்ப பெற்றதை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நேற்று தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ரீதியிலான உறவை முறித்துக்கொள்ளுதல், இந்திய தூதரை திருப்பி அனுப்புதல் போன்ற அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதை தொடர்ந்து செப்டம்பர் 5-ஆம் தேதி வரை பாகிஸ்தான் வான்வழி பாதையை மூட விடவும் உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழி பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று நடைப்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., தேசியப் பாதுகாப்புக் கமிட்டி இந்தியாவுடன் தூதரக ரீதியிலான உறவுகளை தரமதிப்பீட்டளவில் குறைக்கவும், வர்த்தக உறவுகளை முறிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இருதரப்பு ஏற்பாடுகளை மறு சீராய்வு செய்யவும் காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.வுக்கு எடுத்துச் செல்லவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது, என குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் இந்தக் கமிட்டியில் பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14-ஆம் தேதியை ‘தைரிய காஷ்மீரிகளுடன் ஒற்றுமை பாராட்டும் நாள்’ என்று அனுசரிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது., ஆகஸ்ட் 15-ஆம் தேதி கறுப்பு நாளாக அனுசரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.