Rawalpindi Election Fraud: பாகிஸ்தானில் பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் மோசடி செய்ததாக ஒப்புக்கொண்ட ராவல்பிண்டியின் உயர் அதிகாரி சனிக்கிழமை (பிப்ரவரி 17) பதவியை ராஜினாமா செய்தார். ராவல்பிண்டியில் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமிஷனர் லியாகத் அலி சத்தா, உயர் நிர்வாக பதவியை ராஜினாமா செய்ததாக அறிவித்தார்.
 
ராஜினாமா செய்தது ஏன்?
தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு தன் மீது "அழுத்தம்" இருந்ததாகக் கூறிய அவர், அதனால், தேர்தல் முறைகேடுகளுக்கு துணை போனதாகவும், ஆனால், தற்போது தவறை பொதுமக்கள் முன் ஒப்புக்கொள்ள தீர்மானித்ததாக தெரிவித்தார். கமிஷனர் லியாகத் அலி சத்தாசெய்தியாளர்களிடம் பேசிய சிறிது நேரத்திலேயே, ராவல்பிண்டியின் தலைமை போலீஸ் அதிகாரி (Chief Police Officer (CPO)) அவரை கைது செய்தாக தகவல்கள் தெரிவித்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், ராவல்பிண்டி கமிஷனர் லியாகத் அலி சட்டா கைது குறித்த செய்தியை ராவல்பிண்டி போலீசார் மறுத்துள்ளனர், இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.  



"நான் தேர்தலை நியாயமாக நடத்தத் தவறிவிட்டேன். நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். தோல்வியடைந்த 13 வேட்பாளர்களை வெற்றியாளராக அறிவித்து நான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டேன்" என்று அலி சத்தா கூறினார்.


அலி சத்தாவின் குற்றச்சாட்டுகள், பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் மோசடி மற்றும் முடிவுகளை அறிவிப்பதில் வேண்டுமென்றே பாகிஸ்தானின் தேர்தல் ஆணையம் தாமதம் செய்ததா என்றும், சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் பொதுத் தேர்தல் செல்லுமா என்பதை தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வு முடிவு செய்யும். 


மேலும் படிக்க | இந்துகளுக்கு எதிரான கட்சியே பாஜக தான்... ஏன் தெரியுமா? - கனிமொழி சொல்லும் பாயிண்ட்


பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் விளக்கம்
அலி சத்தாவின் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. "தேர்தல் ஆணையத்தின் எந்த அதிகாரியும் ராவல்பிண்டி கமிஷனருக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எந்தப் பிரிவின் ஆணையரும் ஒரு DRO (மாவட்ட தேர்தல் அதிகாரி) அல்லது ஒரு RO அல்லது தலைமை அதிகாரி அல்ல, அவர்கள் யாரும் நேரடியாக தேர்தல் பணியில் ஈடுபடவில்லை. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தும்" என் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தானில் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்த ஒரு பெரிய கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுத்திருந்தது. அந்தக் கட்சிக்கு 92 இடங்களும்,, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) முறையே 75 மற்றும் 54 இடங்களையும் பெற்றுள்ளன.


பிஎம்எல்-என் மற்றும் பிபிபி ஆகியவை பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் விரைவில் பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கின்றான. இந்தக் கூட்டணியின் தலைவராக முன்னாள் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நடைபெற்ற தேர்தல் செல்லுமா செல்லாதா என்ற கேள்வி பிரம்மாண்டமாக எழுந்துள்ளது.


மேலும் படிக்க | ராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறதா பாகிஸ்தான்... நீடிக்கும் குழப்பம்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ