இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இம்ரான் கான் கைதை தொடர்ந்து ஏற்பட்ட  வன்முறைகள் அரசாங்கத்திற்கு மட்டுமன்றி மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் செவ்வாய்க்கிழமை பல நகரங்களில் கலவரத்தில் ஈடுபட்டனர். நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில், இணைய சேவையை அரசு முடக்கியது. வெள்ளிக்கிழமை, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் ஜாமீன் பெற்ற நிலையில், பாகிஸ்தானில் இணைய சேவைகள் மீட்டெடுக்கப்பட்டன. ஆனால் இந்த மூன்று நாட்களில் தொலைத்தொடர்பு துறை பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. அது மட்டுமல்லாது ஆன்லைன் சேவை வழங்கும் பல நிறுவனங்களும், பல இணைய தளங்களும் நஷ்டத்தை சந்தித்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தானில் உள்ள ஒரு தனியார் டிவி சேனல், நாட்டில் இணைய சேவை முடக்கம் காரணமாக மூன்று நாட்களில் தொலைத்தொடர்பு துறைக்கு ரூ.2.46 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டது. தொலைத்தொடர்பு துறை வட்டாரங்களின்படி, ஒவ்வொரு நாளும் மொபைல் பிராட்பேண்ட் சேவைகள் மூலம் அரசுக்கு ரூ.28.5 கோடி வரி வருவாய் கிடைக்கிறது. மூன்று நாட்களில் அரசுக்கு ரூ.86 கோடி வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களாக, பாகிஸ்தானில் உள்ள மக்கள் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடக தளங்களை பயன்படுத்த முடியாமல் விலகி இருந்ததால் இந்த அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் படிக்க | பற்றி எரியும் பாகிஸ்தான்... பொது சொத்துக்களுக்கு தீ வைப்பு... இணைய சேவைகள் முடக்கம்!


இயல்பு வாழ்க்கை பாதிப்பு


செவ்வாய்கிழமை தொடங்கிய வன்முறையால், இணையதளம் முடக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இணைய சேவைகள் முடக்கப்பட்டதால் ஆன்லைன் கல்வி, போக்குவரத்து சேவைகள், உணவு விநியோக சேவை மற்றும் பிற வணிகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் மூன்று நாட்களாக இணையதளம் முடக்கப்பட்டதால் சுமார் 1,50,000 பதிவு செய்யப்பட்ட ரைடர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், 12,000 ஹோட்டல்களின் ஆன்லைன் டெலிவரி சேவை மற்றும் சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான ஃப்ரீலான்ஸ் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.


டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ரூ. 298.93


மறுபுறம், பாகிஸ்தானில் பொருளாதாரத்தின் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. உலகளாவிய கடன் வழங்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியைப் பெற இஸ்லாமாபாத் போராடி வருகிறது. நாட்டின் திவால் மற்றும் மந்தநிலை பற்றிய அச்சம் அதிகரித்துள்ளது. இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தானில் கடுமையான சட்டம்-ஒழுங்கு நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத் துறை மற்றொரு கடுமையான இழப்பைச் சந்தித்துள்ளது. பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு மேலும் மூன்று சதவீதம் சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு மிகவு சரிந்து கிட்டத்தட்ட ₹300 (₹298.93) என்ற அளவை எட்டியுள்ளது.


மேலும் படிக்க | அழிவை நோக்கி செல்லும் பாகிஸ்தான்! இம்ரான் கானால் அதிகரிக்கும் சிக்கல்கள்!


பொதுச் சொத்துக்கள் சேதம்


இம்ரான் கைது செய்யப்பட்டதையடுத்து, ராணுவம் மற்றும் அரசுக்கு எதிராக இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சி தொண்டர்களும் ஆதரவாளர்களும் போராட்டங்களை ஆரம்பித்தனர்.  முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவாளர்கள், ராணுவ தலையகம் முதல் கவர்னர் மாளிகை வரை சென்று பல ராணுவ அதிகாரிகளின் வீடுகளையும் சூரையாடினர். இம்ரான் கான் கைது செய்யப்பட்ட பிறகு, அவரது ஆதரவாளர்கள் கராச்சி, லாகூர் போன்ற நகரங்களில் பொதுச் சொத்துக்களை கடுமையாக சேதப்படுத்தியதோடு, காவல்துறை வாகனங்களுக்கும் தீ வைத்தனர். 


தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) என்ற கட்சியை தொடங்கிய இம்ரான்கான் 2018-ம் ஆண்டு பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் வென்று பிரதமரானார். பாகிஸ்தானில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்,  அரசியல் ஸ்திரத்தன்மை என்பது கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது. அங்கே எப்போதும் ஜனநாயகம் நீடித்ததில்லை. அரசுக்கும் ராணுவத்திற்கு முரண்ட்பாடு ஏற்படும் போது, ஆட்சி கவிழ்ப்பு நடந்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றும். பாகிஸ்தானின் நிலை இது தான். அங்கே ராணுவம் ஐஎஸ்ஐ பகைத்து கொண்டு அங்கே ஆட்சி நடத்த முடியாது. எனவே, இம்ரான் கானும் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.


மேலும் படிக்க | கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்கள்! பல தசாப்தங்களாக தொடரும் கைதுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ