கராச்சி: சிறுபான்மை இந்துக்களை அவமானப்படுத்தும் வகையில், ஒரு ட்வீட்டை பதிவு செய்தார்.  எதிர்ப்பு வலுவான பிறகு, பிரதமர் இம்ரானின் கட்சி எம்.பி. நீக்கியதுடன், அதற்கு மன்னிப்பு கோரியுள்ளார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் லியாகத் உசேன், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாபை கேலி செய்வதற்காக இந்து தேவியின் படத்துடன் ட்வீட் செய்து சர்ச்சையை ஏற்படுத்தினார் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமீர் லியாகத் ஹுசைன் ஒரு பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் ஒரு பிரபலமான மத அறிஞர் என்று அறியப்படுகிறார், ஆனால் அவரது செயலால் அவர் இந்து சமூகம், சிவில் சமூகம் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். சிந்து மாகாணத்தின் தார்பர்கர் பகுதியைச் சேர்ந்த இம்ரான் கானின் கட்சி பி.டி.ஐ பிரதிநிதி ரமேஷ் குமார் வான்க்வானி ஹுசைனின் ட்வீட்டை 'வெட்கக்கேடானது' என்று கண்டித்துள்ளார்.


பாகிஸ்தான் (Pakistan) இந்து கவுன்சிலின் தலைவர் வான்க்வானி, 'மத விஷயங்கள் அனைத்து தெரியும் என கூறிக் கொள்ளும் ஒரு நபருக்கு,  மற்ற மதங்களை மதிக்கக் கூட தெரியவில்லை. இந்த வெட்கக்கேடான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என கூறினார். அவர், 'இந்த ட்வீட்டை உடனடியாக நீக்க வேண்டும், இல்லையெனில் கடவுள் நிந்தனை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரப்படும் என்றார்.


சிந்துவின் உமர்கோட்டைச் சேர்ந்த மற்றொரு இந்துத் தலைவர் லால் மல்ஹியும் ஹுசைனின் செயலைக் கண்டித்து, இந்த சட்டவிரோதச் செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் கானை (Imran Khan)  வலியுறுத்தினார்.


அமீர் லியாகத் உசேன் பின்னர் தனது ட்வீட்டை நீக்கி இந்து சமூகத்திடம் மன்னிப்பு கேட்டார். 'இந்து சமூகத்தின் உணர்வு புண்படுத்தப்பட்டுள்ளதை நான் அறிவேன்' என்று அவர் கூறினார். 'நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன், இது எனது மதம் கற்பிக்கும் பாடம்' என்று ஹுசைன் கூறினார்.


ALSO READ | நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம்: பிரிட்டன் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR