பாக்கிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் தலிபான் தந்தை என அழைக்கப்படும் மௌலானா சாமில் ஹக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படும் சாமில் ஹக், ஜமைட் உலேமா-இ-இஸ்லாம் தலைவராக இருந்தவர் என PTI செய்தி நிறுவன அறிக்கை தெரிவிக்கின்றது.


சாமில் ஹக் இருமுறை (1985 - 1991 மற்றும் 1991 - 1997) ஆகிய காலங்களில் பாகிஸ்தானின் செனட்டில் உறுப்பினராக இருந்தார்.



தாலிபான் தலைவர் முல்லா முகம்மது ஒமர் உடனான நெருங்கிய நட்பினை கொண்டவர் சாமில் ஹக் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.


கோபர் பக்ருன்க்வாவின் அகோரா கத்தாக்கில் டருல் உலும் ஹக்ஹானியா படிமத்தின் தலைவராகவும் சாமில் ஹக் இருந்துள்ளார்.


நடந்து முடிந்த ஜூலை 25 தேர்தலில் ஆளும் பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் உடன் கூட்டணியில் சாமில் ஹக் இருந்துள்ளார்.