பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பு-க்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அல்-அஜீஜீயா ஊழல் வழக்கில் கைதான நவாஸ் ஷெரீப்பு-க்கு தேசிய பொறுப்பான்மை நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேலும் 17 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.



பாக்கிஸ்தான் முன்னாள் முதல்வர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தார் மீது 3 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஊழல் செய்து சம்பாதித்த பணத்தில் லண்டன் மாநகரில் அவென்பீல்டு பகுதியில் சொகுசு வீடு வாங்கி குவித்ததாகவும் குற்றம்சாட்டப்படனர்.


இதில் லண்டன் சொத்து குவிப்பு வழக்கில் கடந்த ஜூன் மாதம் தீர்ப்பு வெளியானது.வெளியான தீர்ப்பின்படி நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு, அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டு, மருமகன் கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்.


இந்த நிலையில், எஞ்சிய 2 ஊழல் வழக்குகளில் (அல் அஜிஜியா, ஹில் மெட்டல் எஸ்டாபிளிஸ்மென்ட்) ஒன்றான அல்-அஜீஜீயா வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இத்தீர்பின்படி நவாஸ் ஷெரீப்பு-க்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள ஹில் மெட்டல் எஸ்டாபிளிஸ்மென்ட் வழக்கின் விசாரணையும் முன்னதாக முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் இந்த வழக்கிலும் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.