பெய்ஜிங்: சீனா தனது பூஜ்ஜிய கோவிட் கொள்கையின் (zero Covid policy) மூலம் கோவிட்-19 தொற்றுநோயை இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறது. அந்தக் கொள்கையின் ஒரு பகுதியாக, கோவிட் -19 நோயாளிகள், அவர்களுடன் தொடர்பில் வந்தவர்கள் என இவர்கள் அனைவரும் சிறிய உலோகப் பெட்டிகளில் தங்கி தனிமைப்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெய்ஜிங் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தத் தயாராகி வரும் நிலையில், கோவிட்-19 (Covid-19) பரவுவதைத் தடுக்க ஏற்கனவே கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நாட்டில் பல வித கடுமையான சோதனைகளும் விதிக்கப்படுகின்றன.



இது குறித்த பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. Xi'an, Anyang மற்றும் Yuzhou ஆகிய இடங்களைப் பற்றி இந்த வீடியோக்களில் காண்பிக்கப்பட்டுள்ளன. ஓமிக்ரானால் (Omicron) சிலர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இங்கு மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வீடியோக்களை அடிப்படையாக வைத்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.


மேலும் கோவிட் நோயை கட்டுப்படுத்தும் தனது முயற்சியில் சீனா தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. ஒரு பகுதியில் ஒரு நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டாலும், அப்பகுதியில் உள்ள அனைவரும், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் அல்லது முதியவர்கள் என யாராக இருந்தாலும், அனைவரும் நெரிசலான பெட்டிகளில் தங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. 


இந்த பெட்டிகளில் ஒரு மர படுக்கை மற்றும் கழிப்பறையும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் மக்கள் இந்த வரையறுக்கப்பட்ட இடங்களில் இரண்டு வாரங்கள் வரை தங்க வேண்டியிருக்கிறது என அதே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் நள்ளிரவுக்குப் பிறகு, மக்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும், தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 


இந்த நடவடிக்கைகள் சீனாவின் கடுமையான பூஜ்ஜிய கோவிட் கொள்கையின் ஒரு பகுதியாக உள்ளன. சீனாவின் லூனார் புத்தாண்டு மற்றும் அடுத்த மாதம் சீனாவில் துவங்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கிற்கு முன் தொற்றை அகற்றுவதை சீனா நோக்கமாகக் கொண்டுள்ளது.


ALSO READ | வட கொரியாவில் வீடு வீடாகச் சென்று சோதனையிடும் அதிகாரிகள்: காரணம் என்ன?


சீனாவின் கடுமையான விதிகள் அடிக்கடி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. சமீபத்தில், கொரோனா வைரஸ் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு சியான் மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் தனது குழந்தையை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 


நுழைவு மறுக்கப்படுவதற்கான காரணம்: அவரது கோவிட் நெகட்டிவ் சோதனை முடிவு நான்கு மணிநேரம் பழமையானது!!


Xi'an இல் உள்ள மருத்துவமனை ஒருவரை அனுமதிக்க மறுத்ததால் மாரடைப்பால் ஒருவர் இறந்துவிட்டார் என்று செய்திகள் வந்துள்ளன. அவருக்கு நெஞ்சு வலி இருந்ததும் தெரிய வந்துள்ளது. 


ஜீரோ-கோவிட் உத்தி: சீனாவில் செயல்பாடு 


2020 ஜனவரியில் சீனாவில் ஒரு புதிய தொற்றுநோய் பற்றிய ஆரம்ப அறிக்கைகள் வெளிவந்தவுடன், தங்கள் எல்லைகளை விரைவாக மூடிய நாடுகள், பூஜ்ஜிய-கோவிட் உத்திகளை வைத்து, இறப்பு விகிதங்களை குறைகக் முடிந்தது. தீவு நாடுகளுக்கு எல்லைகளை மூடுவது எளிதாக இருந்தது. எனினும் சீனா (China) போன்ற வலுவான மத்திய அரசியல் கட்டுப்பாட்டைக் கொண்ட நாடுகளாலும் இந்த செயலுத்தியை செயல்படுத்த முடிந்தது.


இந்த கோவிட் பெருந்தொற்றில், தொற்று எண்ணிக்கை மற்றும் இறப்பு எண்ணிக்கையை வைத்து வெற்றியை அளவிட்டால், சீனாவிற்கு கண்டிப்பாக முதலிடம் கிடைக்கும். ஏனெனில், தனது அடக்குமுறைகளால், சீனா மக்களின் தனிப்பட்ட வாழ்க்கை மீதும் பொது நடத்தை மீதும் தன் வலுவான கட்டுப்பாட்டை கொண்டிருக்கின்றது. 


ALSO READ | COVID-19 தொற்றுக்கு ஒமிக்ரான் முடிவுரை எழுதுமா; UK பேராசிரியர் கூறுவது என்ன...!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR