86 ஆண்டுகள் கழித்து...கங்காரு செய்த கொலை - வீட்டில் வளர்த்தவருக்கு வந்த வினை!
ஆஸ்திரேலியாவில் வீட்டில் வளர்க்கப்பட்ட கங்காரு, அதன் உரிமையாளரின் உயிரைப்பறித்த சம்பவம் நடந்துள்ளது. 86 ஆண்டுகளுக்கு பின் கங்காரு தாக்கி, ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ரெட்மண்ட் நகரில் 77 வயதான ஒருவர், கங்காருவை செல்லப்பிராணியாக வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 11) மதியம் 1 மணிக்கு, அந்த நபர் அவருடைய குடியிருப்பு பகுதியில் படுகாயமடைந்து கிடப்பதை அவரின் உறவினர் பார்த்துள்ளார்.
அதை தொடர்ந்து, உறவினர் அளித்த தகவின்பேரில் காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளது. இருப்பினும், ஆம்புலன்ஸ் வருவதற்குள்முன்பே அந்த நபர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட கங்காரு
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது,"அந்த நபர் கங்காருவால் தாக்கப்பட்டுள்ளார் என தெரிகிறது. அவர் படுகாயமடைந்து கிடந்த இடத்திற்கு சென்றபோது, அங்கு கங்காரு ஒன்று ஆம்புலன்ஸ் பணியாளர்களை அச்சுறுத்தியுள்ளது. அதனால், காயமடைந்த நபரை ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மீட்க முடியவில்லை. எனவே, அந்த கங்காருவை சுட்டுக்கொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், அந்த கங்காருவை அந்த நபர் நீண்ட நாள்களாக செல்லப் பிராணியாக வளர்த்து வந்ததும் தெரியவந்தது" என்றார்.
அந்த கங்காரு எந்த வகை என்பது குறித்த தகவல்கள் உறுதிசெய்யப்படவில்லை. ஆனால், மேற்கு ஆஸ்திரலேயாவில், 'வெஸ்ட்டன் கிரே' (Western Grey)
என்ற வகை கங்காரு தான் அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வெஸ்ட்டன் கிரே கங்காரு வழக்கமாக 7 அடிக்கும் மேல் உயரத்திற்கு வளரும் என்றும் சுமார் 70 கிலோ எடை வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதற்கு முன், 1936ஆம் ஆண்டில்தான் கங்காரு தாக்கிய ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. 86 ஆண்டுகளுக்கு முன்பு, வில்லியம் க்ரூக்ஷாங்க் என்பவர் பெரிய கங்காருவிடம் சிக்கிக்கொண்ட இரண்டு நாய்களை மீட்கும்போது, கங்காரு அவரை பலமாக தாக்கியுள்ளது என்றும் இதில் ஒரு மாதத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | பூனையின் மீது கொண்ட காதல்! வீட்டையே பூனை அருங்காட்சியமாக மாற்றிய தம்பதி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ