கொரோனா வைரஸ் பாதிப்புக்கு, பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தவகல் வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி அந்நாட்டு மக்களிடையே தொடர் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.  வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.  பின்னர் இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவியது.


கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், யுகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் இதுவரை 12 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் சீனா மட்டுமின்றி தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


தாய்லாந்து சிங்கப்பூர் ஆஸ்திரேலியா என இதுவரை 21 நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. சீனாவின் ஊஹானில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தற்போது வரை தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டறியப்படாத நிலையில், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் பணிகள் மட்டுமே தற்போது நடந்து வருகிறது.


கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகாரித்து வருகிறது. சீனாவில் இதனால் 300க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 14 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் வுஹான் பகுதியில் இருந்து தான் இந்த வைரஸ் பரவ தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கிருந்து பிலிப்பைன்சுக்கு சென்ற சீனாவை சேர்ந்த 44 வயது நபர் உயிரிழந்துள்ளார். சீனாவுக்கு வெளியே கொரோனாவால் ஏற்பட்டுள்ள முதல் உயிரிழப்பு இதுவாகும்.