ருவாண்டா நாட்டு கிராம மக்களுக்கு 200 பசுக்களை பிரதமர் மோடி பரிசாக வழங்கியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கவும், நிதி ஆதாரத்தை வலுப்படுத்தவும் ஏழை, எளிய குடும்பத்திற்கு பசு ஒன்றினை வழங்கும் திட்டத்தை 2006-ஆம் ஆண்டு முதல் ருவாண்டா அதிபர் பால் ககாமே செயல்படுத்தி வருகிறார். 
இந்த திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இரு நாடுகளிடையே பொருளாதாரத்தை வலுப்படுத்த விருப்பம் தெரிவிக்கும் வகையிலும் ரிவேரு மாதிரி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவின் சார்பில் ருவாண்டா நாட்டு கிராம மக்களுக்கு 200 பசுக்களை பிரதமர் நரேந்திரமோடி பரிசாக வழங்கியுள்ளார்.




இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, குடும்பத்திற்கு ஒரு பசு வழங்கும் கிரிங்கா திட்டம் கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்ற உதவும் வகையில் சிறப்பு வாய்ந்தது என தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.


இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, ருவாண்டா வளர்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்பு அதிகம் என தெரிவித்துளார். ருவாண்டா நாட்டில் இந்தியர்கள் ஏராளமான சமூக சேவைகளில் ஈடுபடுவதாக, ருவாண்டா அதிபர் தம்மிடம் கூறியது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.