சிறைச்சாலையில் தீ விபத்து -41 பேர் பலி! 39 பேர் காயம்!
இந்தோனேசியா தலைநகரம் ஜகர்தா அருகே டான்கராங் என்ற இடத்தில் மத்திய சிறைச்சாலை உள்ளது.இங்கு 1,225 பேரை அடைக்கக் கூடிய வசதிகள் உள்ளது.
ஜகர்தா: இந்தோனேசியா தலைநகரம் ஜகர்தா அருகே டான்கராங் என்ற இடத்தில் மத்திய சிறைச்சாலை உள்ளது.இங்கு 1,225 பேரை அடைக்கக் கூடிய வசதிகள் உள்ளது.
இந்தோனேசியா நாட்டில் அனைத்து சிறைச்சாலைகளிலுமே இட வசதியைவிட அதிக எண்ணிக்கையில் கைதிகளை அடைத்து வைப்பது வழக்கம். அதேபோல இந்த சிறைச்சாலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் போதை மருந்து குற்றவாளிகள் ஆவர். அங்குள்ள ‘C’ பிளாக்கில் 122 கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். அனைவரும் போதை மருந்து வழக்கில் கைதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அங்குள்ள ஒரு அறையில் திடீரென தீப்பற்றி கொண்டது.அது மற்ற இடங்களுக்கும் பரவியது. இதில் கைதிகள் சிக்கிக் கொண்டனர். சிறைச்சாலையின் அறைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் அவர்களால் தப்பி செல்ல முடியவில்லை. தீயில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 39 பேர் காயம் அடைந்தனர்.
அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தீ விபத்து சம்பவத்தால் அங்கிருந்த கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை அடக்குவதற்காக கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டு வன்முறை அடைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
ALSO READ ஆயுதம் எடுக்கும் எவரும் மக்களுக்கும் நாட்டுக்கும் எதிரி- தலீபான் செய்தி தொடர்பாளர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR