அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் இயங்கி வரும் பேண்டோன் என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அதிகாரப்பூர்வமான நிறம் அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2010-ல் இருந்து இந்த வழக்கம்  நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் 2018-ம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ நிறத்தை அந்த நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. 


இந்த ஆண்டிற்கான நிறமாக பர்பிள் நிறத்தை தேர்வு செய்துள்ளனர். இந்த நிறம் தேர்வு செய்ததற்கான காரணம் செல்வ வளத்தை குறிக்கும் என்பதாலும், வருகிற ஆண்டு அதிக செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த நிறம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்.


இந்த நிறத்தை தேர்ந்தெடுப்பதற்காக உலகில் இருக்கும் முக்கியமான நாடுகள் அனைத்தில் இருந்தும் சில நபர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்களின் சந்திப்பு யாருக்கும் தெரியாத இடத்தில் ரகசியமாக நடைபெறும். மேலும் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்பதும் ரகசியமாக வைக்கப்படும். 


பின்னர், டிசம்பர் மாதத்தில் சரியாக நிறத்தை தேர்வு செய்து அறிவிப்பை வெளியிடுவார்கள். இந்த வகையில் 2018-ம் ஆண்டின் நிறமாக பர்பிள் நிறத்தை தேர்வு செய்து அதிகாரப்பூர்வமாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.