பாக்தாத்: ஈரானின் தளபதி படுகொலை செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து, ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் ராக்கெட் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதல் அமெரிக்க தூதரகம் அருகே நடந்துள்ளது. தாக்குதலுக்கான காரணங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இரண்டு இடங்களில் நடந்த தாக்குதலில் எட்டு பேர் காயமடைந்தாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஒரு தாக்குதல் பாக்தாத்திற்கு அருகிலுள்ள அல்-பாலாத் விமான நிலையத்தில் நடந்துள்ளது. இரண்டாவது தாக்குதல் ஈராகின் பசுமை மண்டலத்தில் நடைபெற்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, பசுமை மண்டலத்திற்குள் ஒரு ராக்கெட் தாக்குதல் நடந்துள்ளது. பசுமை மண்டலம் என்பது பாதுகாப்பு அதிகமாக இருக்கும் பகுதி. இங்கு பல அரசு அலுவலகங்கள் உள்ளன. இரண்டாவது தாக்குதல் அப்-பாலாத் வான்வெளியில் நடந்தது. அமெரிக்க வீரர்கள் தங்கியிருப்பது இங்குதான்.


ஈரானின் ஆயுதப் படைகளின் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐ.ஆர்.ஜி.சி) மூத்த தளபதி ஜெனரல் அபு ஹம்ஸ், அமெரிக்கர்கள் எங்கள் ஜே.டி.க்கு வந்தவுடன் அவரைத் தாக்குவோம் என்று அச்சுறுத்தியுள்ளார். மூத்த தளபதி அபு ஹமாஸ் 35 இலக்குகளின் பட்டியலையும் உருவாக்கியுள்ளார். அதில் இஸ்ரேலின் டெல் அவிவ் அடங்குவார்.


மறுபுறம், ஈரான் தலைநகர் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் குத்ஸ் பிரிவு தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல நேற்று (சனிக்கிழமை) அமெரிக்கா மீண்டும் ஈராக் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியது. பாக்தாத்தின் வடக்கே உள்ள கேம்ப் தாஜி மீதான இந்த தாக்குதலில் 6 பேர் பலியானார்கள். உள்ளூர் நேரத்தின்படி, மதியம் 1.12 மணிக்கு இந்த தாக்குதல் நடந்துள்ளது.


ஈரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாங்கள் எடுத்த நடவடிக்கை ஒரு போரைத் தொடங்குவதல்ல, ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவருவதாகும் என்று டிரம்ப் கூறியுள்ளார். ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக சுலைமானி கொல்லப்பட்டதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல் சதியில் சுலைமானி ஈடுபட்டதாக அமெரிக்க அதிபர் கூறினார். அமெரிக்க தூதர்கள் மற்றும் ராணுவ வீரர்களைத் தாக்க சுலைமணி சதி செய்ததாகவும், இந்தியா மற்றும் லண்டனில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியவர்கள் காசிம் சுலேமானியிடமிருந்தும் உதவி பெறுகிறார்கள் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். ஈரானுடனான போரைத் தொடங்க அமெரிக்கா விரும்பவில்லை என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். 


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது