கத்தார் நாட்டுடனான தூதரக உறவை துண்டிப்பதாக சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் அறிவித்துள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி தூதரக உறவை துண்டிப்பதாக தெரிவித்துள்ளன. அத்துடன் கத்தார் நாட்டின் விமானங்கள், கப்பல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, சவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்திவிட்டாதாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இத்தகவலை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று வெளியிட்டுள்ளது.


இதேபோல் எமிரேட்ஸ், எத்திஹாட் ஏர்வேஸ் நிறுவனங்கள் நாளை முதல் கத்தாருக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளன.