கடுமையான சட்டங்களைக் கொண்ட இஸ்லாமிய நாடான கத்தார், FIFA உலகக் கோப்பை தொடங்கியதில் இருந்தே பல காரணங்களால் தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. விளையாட்டுப் போட்டிகளின் பெரும்பகுதி நிறைவடைந்துள்ளது. இறுதி போட்டி விரைவில் நடக்க உள்ளது. இதற்கிடையில், கத்தார் அதன் குடிமக்களை கொடுமைப்படுத்திய பல சமபவங்கள் காரணமாக தொடர்ந்து சர்ச்சையில் உள்ளது. அதன் பிறகு கத்தார் இளவரசி ஒருவர் குறித்த தகவலும் திடீரென வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயத்தில் நாட்டை விட்டு வெளியேறிய இளவரசி


காத்தார் இளவரசி தனது வீட்டை விட்டு வெளியேறிய அதே காரணத்திற்காக, நாட்டைச் சேர்ந்த பலர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த இளவரசியும் தன் நாட்டுச் சட்டத்தால்  ஏற்பட்ட அச்சம் காரணமாக, தன் குடும்பத்தினர் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து வீட்டை விட்டு ஓடிவிட்டதால்தான் இளவரசி பற்றிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.


விசித்திர இளவரசியின் மனம் பதைபதைக்க வைக்கும் கதை


இளவரசி கத்தாரின் ஆளும் குடும்பமான அல் தானியின் உறுப்பினர். கத்தாரில் ஓரினச்சேர்க்கை தடை செய்யப்பட்டுள்ளது. இளவரசி ஓரின சேர்க்கையாளர். அப்படிப்பட்ட நிலையில், திருநங்கை என்பதால் தானும் கடுமையாக தண்டிக்கப்படுவோமோ என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டது. இதனால் அவள் வீட்டை விட்டு ஓடி விட்டார். இளவரசி நாட்டை விட்டு வெளியேறிய சம்பவம் தொடர்பான கசிந்த ஆவணங்களின் அடிப்படையில் லண்டனின் சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


மேலும் படிக்க | விந்தணுவை ஊசி மூலம் செலுத்திக் கொண்டு கர்ப்பம் அடைந்த சிறுமி! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!


திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை: இளவரசி


அவர் பிரிட்டனில் தஞ்சம் அடைந்தபோது, ​​​​தனது குழந்தைப்பருவம் மிகவும் சோதனையான காலமாக இருந்ததாக அதிகாரிகளிடம் கூறினார். அவர், 'நான் பெண்ணாகப் பிறந்தாலும் வளர்ந்து பின், என் உடலில் ஒரு மாற்றத்தைக் கண்டேன். இதற்குப் பிறகு நான் எனது உறவினர்கள் யாரையும் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. அதேசமயம் கத்தாரில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. அதனால்தான் பாதுகாப்பிற்காக வீட்டை விட்டு ஓடி வந்தேன்.


இங்கிலாந்து அரசாங்கத்திடம் உள்ள இந்த இளவரசியின் ஆவணங்களின்படி, அவர் 2015 கோடையில் தனது குடும்பத்துடன் லண்டனுக்கு குடும்பப் பயணமாகச் சென்றார். அந்த நேரத்தில் அவள் தோழியுடன் அங்கிருந்து தப்பிச் சென்றாள். இப்போது, ​​மில்லியன் கணக்கான விளையாட்டு ஆர்வலர்கள் கத்தாருக்கு வந்துள்ளபோது, ​​​​இந்த நாட்டின் கடுமையான சட்டங்கள் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன. இந்த அத்தியாயத்தில் ஓரினச்சேர்க்கை சட்டம் பற்றி குறிப்பிடப்பட்டபோது, ​​​​கத்தார் இளவரசியின் கதை மீண்டும் ஒரு முறை வைரலானது.


மேலும் படிக்க | குழந்தை பெற்றுக் கொண்டால் ₹3 லட்சம்; சலுகைகளை அள்ளி வீசும் ஜப்பான் அரசு!


மேலும் படிக்க | கள்ளநோட்டுகள் அதிகரிப்பு! 2021ல் கைப்பற்றப்பட்ட போலி நோட்டுகளில் 60% 2000 தாள்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ