டிரம்ப் பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை! முன்னாள் அதிபரை எச்சரித்த நீதிபதி
Donald Trump Rape Case In Trial: 30 ஆண்டுகளுக்கு முன்பு டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் பத்திரிகையாளர் ஈ ஜீன் கரோல் குற்றச்சாட்டும் முன்னாள் அதிபரின் விளக்கமும்
நியூயார்க்: 'டொனால்ட் டிரம்ப் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார், எனக்கு என் வாழ்க்கை திரும்ப வேண்டும்', சிவில் விசாரணையில் எழுத்தாளர் கூறும் குற்றச்சாட்டுக்கள் அதிர வைக்கின்றன. ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் எல்லே பத்திரிகையின் முன்னாள் ஆலோசனைக் கட்டுரையாளர் ஈ ஜீன் கரோல் கூறியதை அடுத்து, முன்னாள் அமெரிக்க அதிபர் அந்தக் கூற்றை 'புனையப்பட்ட மோசடி' என்று அழைத்தார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பலாத்காரம் செய்துவிட்டு, அதைப் பற்றி பொய் சொன்னாரா என்பது தொடர்பான சிவில் விசாரணையில் டொனால்ட் டிரம்ப் தன்னை எப்படி பாலியல் பலாத்காரம் செய்தார் என்று எழுத்தாளர் விளக்கினார்,.
"டொனால்ட் டிரம்ப் என்னை பாலியல் பலாத்காரம் செய்ததால் நான் இங்கு வந்துள்ளேன், அதைப் பற்றி நான் எழுதியபோது, அவர் பொய் சொன்னார், அது நடக்கவில்லை என்று கூறினார்" என்று மன்ஹாட்டனில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் இ ஜீன் கரோல் நீதிபதிகளிடம் கூறினார். "அவர் பொய் சொன்னார் மற்றும் என் நற்பெயரை சிதைத்தார், என் வாழ்க்கையை மீட்டெடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
தற்போது 79 வயதாகும் கரோல், எல்லே பத்திரிகையிl கட்டுரையாளராக பணிபுரிந்தவர். 2024 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் குடியரசுக் கட்சியை வழிநடத்தும் 76 வயதான டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அவர், இழப்பீடு கோருகிறார்.
1995 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 1996 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ’பெர்க்டார்ஃப் குட்மேன் டிபார்ட்மென்ட் ஸ்டோர் டிரஸ்ஸிங் அறையில்’ நடந்ததாகக் கூறப்படும் பலாத்கார வழக்கில், தான் தப்பிச் செல்வதற்கு முன்பு டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் கூறுகிறார்.
மேலும் படிக்க | Women Cricket: சீனியர் மகளிர் கிரிக்கெட் அணி தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ
இந்த குற்றச்சாட்டு குறித்து பேசும் டொனால்ட் டிரம்ப், தன் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டு, முற்றிலும் பொய்யானது என்றும் தன்னை கரோல் இழிவுபடுத்துவதாகவும் கூறுகிறார், மேலும் கரோல் தனக்கு பிடித்தமான "வகை" அல்ல என்றும் சொல்கிறார்.
அவர் நியூயார்க்கின் New York's Adult Survivors Act எனப்படும் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்துள்ளார், இது வரம்புகளின் சட்டங்கள் முடிந்து நீண்ட காலத்திற்குப் பிறகு பெரியவர்கள் தங்கள் துஷ்பிரயோகம் செய்தவர்கள் மீது வழக்குத் தொடர அனுமதிக்கிறது.
செவ்வாய் கிழமை தொடங்கிய வழக்கு விசாரணையில் டிரம்ப் கலந்து கொள்ளவில்லை. அவர் ஆஜராக வேண்டிய அவசியமில்லை. என்று கூறப்படுகிறது. அவர் நியூ ஹாம்ப்ஷயர் பிரச்சார நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளார், இந்த வழக்கில் டிரம்ப் சாட்சியமளிப்பது சாத்தியமில்லை என்று இரு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கரோலின் வழக்கிற்கு டிரம்ப் தெரிவித்த கருத்துக்கள், அவமதிப்பானவை என்று கூறியது மோசமான முன்னுதாரணம் என்று தெரிவித்த நீதிபதி, டிரம்ப் இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து இவ்வாறு மோசமான கருத்துக்கள் தெரிவித்தால், மேலும் சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார்.
கற்பழிப்பு என்று கூறப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே, தனக்குக் டொனால்டு டிரம்பைத் தெரியும் என்று விசார்ணையில் தெரிவித்த கரொல், அவர் "மிகவும் ஆளுமை வாய்ந்தவர்" என்றும் சாட்சியமளித்தார். பெர்க்டார்ஃபில், டிரம்ப் அவளை அடையாளம் கண்டு கையை உயர்த்தியபோது, தான் கடையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்ததாகவும், டிரம்ப் அழைத்ததும், தான் உள்ளே வந்ததை கரோல் நினைவு கூர்ந்தார்.
மேலும் படிக்க | CSKயில் இணைந்த பிறகு கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனை பெற்ற கிரிக்கெட்டர்கள்
டிரம்ப் மற்றொரு பெண்ணுக்கு உள்ளாடைகளை வாங்கும்போது, தான் கேலி செய்ததாக கரோல் கூறினார். அப்போது, அந்த உள்ளாடைகளில் ஒன்றை தன்னை முயற்சிக்கச் சொல்லி டிரம்ப் கேட்டுக் கொண்டதாக கரோல் கூறினார்.
ட்ரம்ப் பின்னர் தன்னை ஆடைகளை போட்டுப் பார்க்கும் அறைக்குள் அழைத்துச் சென்று, கதவை மூடி, ஒரு சுவருக்கு எதிராக அவளைத் தள்ளி, அவளது டைட்ஸைக் கீழே இழுத்ததாக கரோல் குற்றம் சாட்டினார். அப்போது தனக்கு மூச்சுத் திணறியதாகவும் கண்ணீர் விட்டு அழுததாகவும் கரோல் தெரிவித்தார்.
அந்த சம்பவம் குறித்து விரிவாக பேசிய கரோல், "இன்று நான் இங்கே அமர்ந்திருக்கிறேன், இன்றும் அந்த வலியை என்னால் உணர முடிகிறது, அந்த சம்பவம் என்னை மீண்டும் ஒரு காதல் வாழ்க்கையில் ஈடுபட செய்ய முடியாமல் செய்துவிட்டது" என்று தெரிவித்தார்.
டிரம்ப் உங்களை பலாத்காரம் செய்தபோது "வேண்டாம்" என்று சொன்னீர்களா என்று வழக்கறிஞர் கேட்டதற்கு, "நான் அதைச் சொல்லியிருக்கலாம், ஆனால் சொன்னேனா என்று தெரியாது" என கரோல் கூறினார்.
அந்த சம்பவம் நடந்தபோதே ஏன் புகார் அளிக்கவில்லை என்று, தன்னைத்தானே குற்றம் சாட்டுவதாக தெரிவித்த கரோல், டிரம்ப் மீது புகார் அளித்தால் அவர் பதிலடி கொடுப்பார் என்று பயப்பட்டதாகக் கூறினார்.
2019 இல் #MeToo இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, கரோல் டிரம்ப் மீது புகார் கொடுக்க முன் வந்தார். தான் அரசியல் ரீதியாக டிரம்ப் மீது குற்றம் சொல்லவில்லை. நான் பொய் சொல்வதாக அவர் மீண்டும் மீண்டும் சொன்னார், அது எனக்கு கெட்ட பெயரை உருவாக்கிவிட்டது, எனவே நான் பின்வாங்கப்போவதில்லை என்று 79 வயது கரோல் கூறுகிறார்.
மேலும் படிக்க | DC Player: டெல்லி கேபிடல்ஸ் அணி விருந்தில் பெண்களை சீண்டிய கிரிக்கெட்டர் யார்?
இந்த விவகாரத்தை வெளியில் கொண்டுவந்து மௌனத்தை முடித்துக் கொண்டதற்கு வருந்துகிறாயா என்று நீதிமன்றத்தில் கேட்கப்பட்டபோது கரோல் உடைந்து போனார்.
"நான் இதைப் பற்றி 100 முறை வருந்தினேன், ஆனால் இறுதியில் நீதிமன்றத்தில் எனக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக அதை பொறுத்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.
ட்ரம்பின் வழக்கறிஞர்கள் வியாழன் அன்று கரோலிடம் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதன்கிழமை சாட்சியம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ட்ரம்ப் தனது கருத்துக்களை Truth Social இல் பதிவு செய்தார்.
தன் மீது குற்றம் சொல்லும் கரோலை எப்படி நம்புவது என்று அவர் கேள்வி எழுப்பிய டிரம்ப், "அவள் கத்தவில்லையா?", "சாட்சிகள் இல்லையா? இதை யாரும் பார்க்கவில்லையா?" என்று பதிவிட்டது சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
கரோலின் வழக்குக்கு நிதியளிக்கும் பில்லியனர் லிங்க்ட்இன் இணை நிறுவனரும் பிரபல ஜனநாயகக் கட்சி நன்கொடையாளருமான ரீட் ஹாஃப்மேனைப் பற்றி ட்ரம்பின் மகன் எரிக் புதன்கிழமை பிற்பகல் ட்வீட் செய்ததைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்துவது பற்றிய கவலை மீண்டும் எழுந்தது.
மேலும் படிக்க | ICC WTC Final: ரோஹித்துக்கு பதிலாக விராட் கோலி? பரிந்துரைக்கும் ரவி சாஸ்திரி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ