India-Pakistan கோவிட் தடுப்பூசி சான்றிதழ் பரஸ்பர அங்கீகரிப்பு சாத்தியமா?
கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பரம் அங்கீகரிக்கலாம் என பாகிஸ்தானிடம் இந்தியா முன்மொழிந்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு என்ன பயன்?
புதுடெல்லி: கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பரம் அங்கீகரிக்கலாம் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா பரிந்துரைத்துள்ளது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
ஆனால், இந்தியாவின் முன்மொழிவு தொடர்பாக இதுவரை இஸ்லாமாபாத்தில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பரஸ்பரம் அங்கீகரிக்கப்பட்டால் அது பல இந்திய யாத்ரீகர்களுக்கு உதவும்.
கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பரம் அங்கீகரிக்க பாகிஸ்தானுக்கு இந்தியா முன்மொழிந்துள்ளது. தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பரம் அங்கீகரிப்பது என்றால் என்ன? கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், பரஸ்பர அங்கீகாரம் பெற்ற நாடுகளுக்கு பயணிக்கும்போது, கொரோனா தொடர்பான நீண்ட நடைமுறைகளை பின்பற்றாமல் செல்லலாம். இதனால் அவர்கள் விமான நிலையம்/போக்குவரத்து மையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். இது மக்களின் இயக்கத்தை எளிதாக்கும்.
எனவே இந்தியாவின் முன்மொழிவை பாகிஸ்தான் ஏற்றுக் கொண்டால், பல இந்திய யாத்ரீகர்களுக்கு உதவும். குறிப்பாக இந்தியாவில் இருந்து, பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப் கர்தார்பூர் திறக்கப்பட்டவுடன் அதற்குச் செல்லும் சீக்கிய யாத்ரீகர்களுக்கு உதவியாக இருக்கும். இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு விசா இல்லாத பயணத்தை அனுமதிக்கும் புனித குருத்வாரா யாத்திரை, கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டது.
கோவிட் காரணமாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பயணம் பாதிக்கப்பட்டது. அது மட்டுமல்ல, ஜம்மு -காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கிய பிறகு, பாகிஸ்தான், இந்தியாவிற்கான அனைத்து ரயில், பேருந்து சேவைகளையும் நிறுத்தியது.
Read Also | இந்திய மீனவர்களை இலங்கை எப்போது திருப்பி அனுப்பும்???
ஆப்கானிஸ்தான் (Afghanistan) தொடர்பான தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்திற்கு இஸ்லாமாபாத்திற்கு, இந்தியா அழைப்பு அனுப்பிய சில நாட்களுக்குப் பிறகு இந்தியா, இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளது.
நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் பாகிஸ்தான், ஈரான், ரஷ்யா, சீனா மற்றும் சில மத்திய ஆசிய நாடுகள் சம்பந்தப்பட்ட NSA சந்திப்பை இந்தியா நடத்துகிறது.
அக்டோபர் 20 நிலவரப்படி, தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட அல்லது WHO அங்கீகாரம் பெற்ற COVID-19 தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட தனிநபர்களுக்கான பரஸ்பர தடுப்பூசி சான்றிதழ் அங்கீகாரத்திற்காக இந்தியா 11 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நேபாளம், பெலாரஸ், லெபனான், ஆர்மீனியா, உக்ரைன், பெல்ஜியம், ஹங்கேரி, செர்பியா ஆகிய நாடுகளுடன் இந்தியாவுக்கு பரஸ்பர கோவிட் தடுப்பூசி அங்கீகார ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி சான்றிதழ்களின் பரஸ்பர அங்கீகாரத்திற்காக இந்தியா மேலும் பல நாடுகளை அணுகி வருகிறது. இந்த வார தொடக்கத்தில், இந்தியாவும் இஸ்ரேலும் கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழை பரஸ்பரம் அங்கீகரிப்பதாக ஒப்புக்கொண்டன.
Also Read | அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR