Farmers Protest: பாரிஸை சுற்றி வளைத்துள்ள விவசாயிகள்... பிரான்ஸில் வலுக்கும் போராட்டம்!
Farmers Protest in Europe: டெல்லி சலோ போராட்டத்தின் ஒரு பகுதியாக பஞ்சாப் ஹரியானா எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முகாமிட்டுள்ளனர். இந்தியா மட்டும் இன்றி ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Farmers Protest in Europe: டெல்லி சலோ போராட்டத்தின் ஒரு பகுதியாக பஞ்சாப் ஹரியானா எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முகாமிட்டுள்ளனர். இந்தியா மட்டும் இன்றி ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல மாதங்களாக, பல்வேறு வகையில் பிரச்சினைகளை சந்தித்து வரும் விவசாயிகள் பெரும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். அவர்களை கொண்டு பிரான்ஸ் இன் தலைநகரை சுற்றிவழித்துள்ளனர்.
ஐரோப்பிய யூனியன் விவசாயிகளின் போராட்டத்திற்கான சில முக்கிய காரணங்கள்
எரிசக்தி, போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு
ஐரோப்ப யூனியனில் விவசாய பொருட்களுக்கான குறைந்த விலைகள் நிர்ணயிக்கப்படும் அதே நேரத்தில், வேளாண் செலவுகள் பெருமளவு அதிகரித்துள்ளது. இதனால் லாபம் மிக மிக குறைந்து விட்டது. ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக, எரிசக்தி, போக்குவரத்து செலவுகள், உரம் போன்றவற்றுக்கான செலவுகள் பெருமளவு அதிகரித்துள்ளன. அரசுகளும், சில்லறை விற்பனையாளர்களும், நுகர்வோருக்கு மலிவு விலையில் உணவு பொருட்களை கொடுக்கும் முயற்சியில், விவசாயிகளின் விளைச்சலுக்கு போதுமான விலை நிர்ணயிப்பதில்லை.
இறக்குமதியினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் உள்ள விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்திக்கு மற்றொரு முக்கிய காரணம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களினால் ஏற்பட்டுள்ள போட்டி. ரஷ்யாவின் படையெடுப்புக்கு பிறகு, சுக்ரீனுக்கு வழங்கப்பட்ட பல வர்த்தக சலுகைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, உக்கரை மிக குறைவான விலையில், விவசாய விளைபொருட்களை ஐரோப்பாவிற்கு வழங்குகிறது. இது விவசாயிகளின், விலைப் பொருட்களுக்கான விலையை குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் இது குறித்து விற்கப்பட்ட கோரிக்கையை எடுத்து, உக்கிரேனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விளைபொருட்கள் மீது சில வரம்புகள் விதிக்கப்பட்ட போதிலும், விவசாயிகள் இதனால் திருப்தி பட வில்லை.
மேலும் படிக்க | வேலையை விடாதீங்க... சம்பள உயர்வு 300%... இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள்!
காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள சவால்
காலநிலை மாற்றத்தின் விளைவுகள் விவசாயிகளை பெருமளவு பாதித்துள்ளன. இதனால் அவர்களின் சவால்கள் அதிகரித்துள்ளது. வறட்சி, வெள்ளம் காட்டு தீ போன்ற வானிலை நிகழ்வுகள், பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. உதாரணத்திற்கு ஸ்பெயின் நாட்டில் சில நீர் தேக்கங்கள், நாலு சதவீதம் மட்டுமே நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீர் பற்றாக்குறையினால், விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு எடுத்துக் கொண்டால், காட்டு தீயினால், விவசாயிகளுக்கு, வருமானம் 20% என்ற அளவில் குறைந்து போனது.
கடுமையான ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகள்
விவசாய விளைபொருட்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள விதிமுறைகள், நடைமுறைக்கு ஒத்து வராததாக இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். அரசு நிர்ணயிக்கும் தரநிலை விதிகள், கடும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். மலிவான விலையில், விலை பொருட்களை வழங்க வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கும் அதே நேரத்தில், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும் என்று விதிகள் கடுமையாக்கப்படுகின்றன. இந்த இரண்டிற்கும் இடையில் தாங்கள் மாட்டிக் கொண்டு அல்லல்படுவதாக விவசாயிகள் நினைக்கின்றனர்.
இந்தியாவில் நடக்கும் விவசாயிகள் போராட்டம்
இந்தியாவில் விவசாயிகள், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், ஓய்வூதியம், போலீஸ் வழக்குகளை வாபஸ் பெறுதல், இலக்கியம் போர் கேரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல், 2013 ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட கோழிகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | மனித மூளையில் சிப்... எண்ணங்களால் கணிணி மவுஸை இயக்கும் பக்கவாத நோயாளி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ