ரியோ 2016: பத்திரிக்கையாளர் பஸ் மீது துப்பாக்கிச் சூடு
பிரேசில் நடைபெறும் ரியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடர்பாக செய்தி சேகரிக்க பத்திரிக்கையாளர்கள் சென்ற பஸ் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
கூடைப்பந்து போட்டிகள் நடந்த இடத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியின் தலைமை பூங்கா அமைந்துள்ள இடத்திற்கு பஸ் சென்ற போது பஸ் மீது இரண்டு முறை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது. இதில் பஸ் கண்ணாடிகள் நொருங்கியதில் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இச்சம்பவம் குறித்து பிரேசில் போலீஸ் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் சம்பவம் ஆகும். இதற்கு முன் கடந்த வாரம் சைக்கிள் போட்டிகளின் போது குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல்களின் காரணமாக பிரேசில் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.