அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதர் அனடோலி அன்டோனோவ் (Anatoly Antonov) திரும்ப அழைத்துக் கொள்ளப்ப்பட்டுள்ளார். ஜோபைடனின் “கொலையாளி” சர்ச்சைக்கு பிறகு அவர் மாஸ்கோவுக்குத் திரும்புகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெடுங்காலத்திற்கு பிறகு, அமெரிக்காவுடனான உறவுகளில் ஏற்பட்ட மோசமான நெருக்கடி குறித்து அவசரகால ஆலோசனைகளுக்காக திரும்ப அழைக்கப்பட்ட, அமெரிக்காவிற்கான ரஷ்யாவின் தூதர் ஞாயிற்றுக்கிழமை மாஸ்கோவில் தரையிறங்கினார்.


இந்த வார தொடக்கத்தில் தொலைக்காட்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden)  ரஷ்ய தலைவரை ஒரு 'கொலையாளி' என்று வர்ணித்தார். இதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) கடும் கண்டனம் தெரிவித்தார்.


வாஷிங்டனுடனான மாஸ்கோவின் உறவுகள் ஏற்கனவே விரிசல் கண்டிருந்தன, தேர்தல் தலையீடு தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னியை (Alexei Navalny) சிறையில் அடைக்க கிரெம்ளின் எடுத்த முடிவு ஆகியவை தொடர்பாக ஏற்கனவே ராஜீய நிலையிலான உறவுகள் பாதிக்கப்பட்டிருந்தன.


ALSO READ | ரஷ்யாவில் "விஷ" அரசியல்... சதியில் Vladimir Putin-க்கு தொடர்பு உள்ளதா ..!!!


அமெரிக்காவிற்கான ரஷ்யாவின் தூதர் அனடோலி அன்டோனோவ் (Anatoly Antonov) ஞாயிற்றுக்கிழமை காலை மாஸ்கோவின் ஷெரெமெட்டீவோ விமான நிலையத்தில் தரையிறங்கியதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


நியூயார்க்கில் புறப்படுவதற்கு முன்னர், அவர் மாஸ்கோவில்  எவ்வளவு காலம் தேவையோ அவ்வளவு காலம் தங்கியிருக்கப் போவதாகவும், பல கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டதாகவும் கூறினார்.


"ரஷ்ய-அமெரிக்க உறவுகளை மேம்படுத்துவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம் என்று ரஷ்ய தரப்பு எப்போதும் வலியுறுத்தியுள்ளது" என்றும் அவர் கூறினார்.


தூதர்களை அரிதாக திருப்பி அழைத்துக் கொள்ளும் மாஸ்கோ, கடைசியாக 1998 ல் ஈராக்கில் நடந்த  குண்டு வெடிப்பு தொடர்பாக அமெரிக்காவில் தனது தூதரை திரும்ப அழைத்துக் கொண்டது.


ALSO READ | புடின் கொலையாளியா என்ற கேள்விக்கு ‘ஆம்’ என பதிலளித்தார் ஜோ பைடன்: காரணம் இதுதான்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!



Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR