FATF கருப்பு பட்டியலில் இணைந்தால்... இந்தியாவை எச்சரிக்கும் ரஷ்யா..!!
FATF அமைப்பின் தடை பட்டியலில் சேர்வதைத் தவிர்க்க உதவாவிட்டால், இந்தியா உட்பட மற்ற நாடுகளுடனான பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என ரஷ்யா மிரட்டியுள்ளது.
மாஸ்கோ: உலகில் எந்த இரு நாடுகளுக்கிடையேயான சிறந்த நட்புறவுக்கு உதாரணம் என்றால் அதற்கு இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நட்புறவு தான். கடந்த ஆண்டு உக்ரைன் போர் வெடித்தபோது, பாதிக்கு மேற்பட்ட உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகத் திரும்பின, ஆனால் இந்தியாவுடனான அதன் உறவுகள் பாதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது இந்த நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை நிதி நடவடிக்கைக் குழுவின் (FATF) 'கருப்புப் பட்டியலில்' சேர்த்து பொருளாதார ரீதியாக முற்றிலும் தனிமைப்படுத்த முயற்சிக்கின்றன. இது தொடர்பாக ‘அச்சுறுத்தும் தொனியில்’ இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளிடம் ரஷ்யா உதவி கோரியுள்ளது.
புளூம்பெர்க் அறிக்கையின்படி, FATF அமைப்பின் தடை பட்டியலில் சேர்வதைத் தவிர்க்க உதவாவிட்டால், இந்தியா உட்பட மற்ற நாடுகளுடனான பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என ரஷ்யா மிரட்டியுள்ளது. நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) பணமோசடி, பயங்கரவாதத்திற்கான நிதியுதவி ஆகியவற்றைச் சமாளிக்க உலகளாவிய நடவடிக்கைக்கு வழிவகுக்கிறது. மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை கருப்பு அல்லது சாம்பல் பட்டியலில் சேர்க்க FATFக்கு அழுத்தம் கொடுக்கின்றன.
ரஷ்யாவின் அச்சுறுத்தல், எச்சரிக்கை மணி
FATF அமைப்பின் உறுப்பினர் பதவியில் இருந்து ரஷ்யாவை பிப்ரவரி மாதம் இடைநீக்கம் செய்தது. மறுபுறம் உக்ரைன் ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்க வலியுறுத்தி வருகிறது. தற்போது, இந்த அறிக்கை குறித்து இந்தியா மற்றும் ரஷ்யாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை, ஆனால் ரஷ்யாவின் அச்சுறுத்தல் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டால், அது பல திட்டங்களை பாதிக்கும்.
இந்தியாவுக்கு ஏற்படும் இழப்பு
FATF கருப்பு பட்டியலில் ரஷ்யா இணைந்தால், அந்த நாடுகளுடன் மற்ற நாடுகள் நிதி பரிவர்த்தனைகள், திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படும்.எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெப்ட் மற்றும் நயாரா எனர்ஜி லிமிடெட் இடையேயான ஒத்துழைப்பு பாதிக்கப்படும். இந்தியாவுக்கான ரஷ்ய ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களின் ஏற்றுமதி மற்றும் பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பும் பாதிக்கப்படலாம். இந்தியாவில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தொழில்நுட்பம் மற்றும் ஆற்றல், ஒத்துழைப்பு மற்றும் வடக்கு-தெற்கு வர்த்தக வழித்தடத்தின் வளர்ச்சியுடன் இணைக்கப்பட்ட சரக்கு போக்குவரத்து சேவைகள் தொடர்பான ரஷ்ய ரயில்வேயின் லாஜிஸ்டிக்ஸ் கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா இடையேயான ஒப்பந்தமும் பாதிக்கப்படலாம்.
மேலும் படிக்க | என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க! இந்தியப் பிரதமரின் காலில் விழுந்த பப்புவா கினியா பிரதமர்
இந்தியா புறக்கணிப்பது கடினம்
உக்ரைன் போர் காரணமாக, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் உலகிலேயே அதிக தடை விதிக்கப்பட்ட நாடாக , ரஷ்யா ஆகியுள்ளது. பொருளாதாரத் தடைகள் மூலம் ரஷ்யாவை பின்வாங்குமாறு மேற்கத்திய நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனால் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் மாஸ்கோ தனது பொருளாதாரத்தின் பாதிப்பை பெருமளவு தணித்துள்ளது. எனினும், FATF தடுப்புப்பட்டியலில் ரஷ்யா இணைந்தால், இந்தியா அதை புறக்கணித்து வழக்கம் போல் அதனுடன் வர்த்தகம் செய்வது கடினம்.
மேலும் படிக்க | பப்புவா நியூ கினியா சென்ற பிரதமர் மோடிக்கு கிடைத்த வரவேற்பும் விருதுகளும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ