கீவ்: உக்ரைனில் நடக்கும் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைக்கு மாஸ்கோ தயாராக இருப்பதாகவும், ஆனால் உக்ரைனின் ராணுவ உள்கட்டமைப்பை அழிக்கும் முயற்சிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர், நாட்டின் பிரதிநிதிகள் குழு தனது கோரிக்கைகளை உக்ரேனிய பிரதிநிதிகளிடம் இந்த வார தொடக்கத்தில் சமர்ப்பித்ததாகவும், இப்போது வியாழன் அன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் உக்ரைனின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் கூறினார்.


மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை அளித்து வருவதாகவும், அதன் படைகளுக்கு பயிற்சி அளித்து, உக்ரைனை ரஷ்யாவிற்கு எதிரான அரணாக மாற்றுவதற்காக அங்கு தளங்களை உருவாக்கி வருவதாகவும் லாவ்ரோவ் கூறினார். 


மேலும் படிக்க | உக்ரைன் இந்திய மாணவர்களை பிணைக் கைதிகளாக வைத்துள்ளதா.. இந்தியா கூறுவது என்ன..!!


உக்ரைன் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வருவதாக ரஷ்யா கூறுகிறது. மற்ற நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளை திட்டமிட்டு வருவதாகவும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.


ரஷ்யா உக்ரைன் இடையிலான பதட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியர்கள் உட்பட உக்ரைனில் சிக்கியிருக்கும் அனைவரும் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். பல்வேறு அரசாங்கங்களும் தங்கள் நாட்டு மக்களை அழைத்து வர அனைத்து வித ஏற்பாடுகளையும் செய்து வருகின்றன. 


இதற்கிடையில் இந்திய மாணவர்களை உக்ரைனிலிருந்து பாதுகாப்பாக அழைத்து வரும் பணிகளும் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகின்றன். ‘நாங்கள் வழங்கிய அறிவுரையை அடுத்து, ஏராளமான மாணவர்கள் கார்கிவை விட்டு வெளியேறியுள்ளனர். உக்ரைனின் மேற்கு எல்லையை கடக்க காத்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்திய குடிமக்களை வெளியேற்றுவது குறித்து நாங்கள் ரஷ்ய மற்றும் உக்ரைன் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்’ என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


மேலும் படிக்க | அணு ஆயுத போர்; 30 நிமிடங்களில் 100 மில்லியன் பேர் கொல்லப்படுவார்கள்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR