Russia Ukraine war: 2 ஆண்டுகள் நிறைவடைந்து 3ம் ஆண்டாக தொடரும் ரஷ்யா உக்ரைன் போர்..!!
ரஷ்யா உக்ரைன் போர்: கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா அறிவித்தது. நாட்டு அமைப்பு நாடுகளில், உக்ரைன் இணைவது எதிர்த்து அண்டை நாடான ரஷ்யா போர் தொடுத்தது.
ரஷ்யா உக்ரைன் போர்: கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா அறிவித்தது. நாட்டு அமைப்பு நாடுகளில், உக்ரைன் இணைவது எதிர்த்து அண்டை நாடான ரஷ்யா போர் தொடுத்தது. இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது ஆண்டில் நுழைந்து உள்ள இந்தப் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
பிற நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்கள்
போரினால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்து பிற நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, குழந்தைகள் கல்வியை இழந்து பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை 30,457 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைனில் உள்ள ஐநா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது
உக்ரைன் அதிபர் விளாடிமர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோ
ரஷ்யா உக்கரின் போர் மூன்றாம் ஆண்டில் நுழைந்ததை அடுத்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, 730 நாட்களாக போரிடும் நாம் வெற்றி நெருங்கி வருகிறோம் என்று குறிப்பிட்டார். எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோவில், போர்க்களத்தில் இருக்கும் ஒவ்வொரு வீரரையும் நினைத்து தான் பெருமைப்படுவதாகவும், அவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், போர் முடிவுக்கு வர வேண்டும் என்பது மனிதர்களின் இயல்பு. ஆனால் உக்கிரனை அழிக்க நாம் அனுமதிக்க முடியாது. போர் முடிவுக்கு வர வேண்டும் என்றால், அது உக்கிரேனுக்கு கிடைக்கும் நீதியின் அடிப்படையிலேயே இருக்கும் என்றார்.
பின்னடைவை சந்தித்து வரும் உக்ரைன்
உக்ரைனின் சில பகுதிகளை கையில் பற்று இருப்பதாக ரஷ்யா கூறும் நிலையில், உக்ரைன் ரஷ்யாவில் ஊடுருவ முடியாமல் பின்னடைவை சந்தித்து வருகிறது. மேற்கத்திய நாடுகள் மூலம் கிடைக்கும் உதவியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது இதற்கு காரணம் என கூறப்படுகிறது. போர் தொடக்க காலத்தில், ரஷ்யாவை வீழ்த்த மேற்கத்திய நாடுகள் பெரிய அளவில் பண உதவியும் வழங்கி வந்த நிலையில், இப்போது அது போன்ற உதவிகள் அதிக அளவில் கிடைக்கவில்லை. அமெரிக்காவிலிருந்தும், தொடக்க காலத்தைப் போல தாராளமான உதவி கிடைக்கவில்லை. எனவே உக்கிரன் அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | $500 மில்லியனுக்கும் அதிகமான கடன்! திவாலாகிறாரா அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்?
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்மீது வைக்கப்படும் விமர்சனங்கள்
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், ஜோபேடன், உக்ரைனுக்கு உதவுவது தொடர்பாக பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். போரை தடுத்து நிறுத்தாமல், போர் நீடிக்க அவர் உதவுவதாகவும் கூறப்படுகிறது. உள்நாட்டில் அவருக்கு எதிராக விமர்சனங்கள் அதிகரித்து உள்ளதன் காரணமாக உக்ரைனுக்கு செய்யும் உதவிகளில் தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
முழு பலத்துடன் இறங்கியுள்ள ரஷ்யா
உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவிற்கு உதவ சீனா தயாராக இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரஷ்யா முழு பலத்துடன் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. வல்லரசாக உள்ள ரஷ்யா தோல்வியடைந்த கூட கூடாது என்பதற்காக, மிகவும் உக்கிரமாக களத்தில் இறங்கி உள்ளது. உக்ரைனும் தனது சுதந்திரத்தை தக்க வைத்துக் கொள்ள விடாமல் போராடி வருகிறது. பொருளாதார நிலையிலும் ரஷ்யா முன்னேறி வருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ள போதிலும், அமெரிக்காவின் பொருளாதரத்தை விட ரஷ்யாவின் பொருளாதாரம் மூன்று சதவீதம் அளவிற்கு வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ