துரோகிகள் கொசுக்களை போல் நசுக்கப்படுவார்கள் என எச்சரிக்கும் ரஷ்ய அதிபர் புடின்
போர்க்களத்தில் ரஷ்யா கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், ரஷ்ய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் ஆர்வலர்களுக்கு கடுமையான எச்சைக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை.
போர்க்களத்தில் ரஷ்யா கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், ரஷ்ய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் ஆர்வலர்களுக்கு கடுமையான எச்சைக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புதன்கிழமை "துரோகிகளுக்கு" எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ரஷ்யர்களுக்கு "தேசபக்தர்களையும் மோசமான எண்ணம் கொண்டவர்களையும் வேறுபடுத்தி பார்க்க முடியும்’ என்று புடின் கூறினார். புதன்கிழமை அரசு அமைச்சர்களுக்கு இடையே உறையாற்றிய அவர் ரஷ்யர்கள் துரோகிகளை "கொசுக்களைப் போல" நசுக்கி விடுவார்கள் என்று கூறினார்.
முன்னதாக, ரஷ்யாவின் இராணுவத்தை "இழிவுபடுத்தும் வகையில்" இணைய தளத்தில் பதிவிட்ட ஒருவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அச்சுறுத்தப்பட்டது. உக்ரைன் மீதான போரை எதிர்த்ததால், "துரோகம்" செய்தததாக குற்றசாட்டட்டுள்ள முன்னாள் அதிகாரியை பதவி நீக்கம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது.மேலும், ரஷ்யா அரசு மற்றும் ரஷ்ய ராணுவத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கும் நபர்கள், ஆர்வலர்கள் வீட்டில் எச்சரிக்கை வாசகமும் ஒட்டப்படுகிறது.
மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு போர்க் குற்றவாளி: ஜோ பைடன்
முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் புதன்கிழமை (மார்ச் 16, 2022) ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடினை ஒரு போர்க் குற்றவாளி என்று கூறினார். உக்ரைனில் போர் "திட்டமிடப்பட்ட வகையில் முன்னேறி வருவதாக" ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையில் இருந்து வெளியான கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா இவ்வாறு கூறியது.
கிரெம்ளின் படைகள் தொடர்ந்து முற்றுகையிடப்பட்ட நகரங்கள் மீது குண்டுவீச்ச்சு தாக்குதல்களை நடத்தி வருகின்றன, தலைநகர் கீவ் மீது ஷெல் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில், தியேட்டர் ஒன்றில், உணவுக்காக வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் எண்ணெய்: அமரிக்கா கூறுவது என்ன!
மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR